இந்திய டி20 அணியில், தொடர்ச்சியாக சொதப்பினாலும் ரெகுலராக இடம் பிடிக்கும் பேட்டராக திலக் வர்மா இருக்கிறார். பல போட்டிகளில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிவிட்டு, ஒரு போட்டியில் அதிரடியாக ஆடி, சமாளித்துவிடுகிறார்.
இந்நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி, ஒரு வெற்றியைக் கூட பெறாமல் இருக்கும் நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள், சில வீரர்களை தொடர்புகொண்டு, இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
குறிப்பாக, துணைக் கேப்டன் திலக் வர்மாவிடம், பிசிசிஐ நிர்வாகிகள், நீண்ட நேரம் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. காரணம், இவர் அயர்லாந்து டி20 தொடர், இங்கிலாந்து டி20 தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 21 பந்தில் 19 ரன்களை மட்டுமே அடித்த இவர், அடுத்து இரண்டாவது போட்டியில் 46 பந்தில் 55 ரன்களை மட்டுமே எடுத்தார். இரண்டு போட்டிகளிலும் பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடவில்லை. இதுவும், அயர்லாந்து டி20 தொடரில், இந்திய அணி தோற்க காரணமாக அமைந்தது.
பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதல் போட்டியில் 13 பந்தில் 13 ரன்களை அடித்த அவர், அடுத்த 4 போட்டிகளிலும், 11 பந்தில் 24* ரன், 11 பந்தில் 3 ரன், 8 பந்தில் 11 ரன், 25 பந்தில் 53 ரன். இப்படி, கடைசி 7 டி20 போட்டிகளில், திலக் வர்மாவால் ஒரேயொரு போட்டியில் மட்டுமே பெரிய ரன் ரேட்டில் ஆட முடிந்திருக்கிறது.
இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகிகள் கேள்வி எழுப்பிய நிலையில், திலக் வர்மா கொடுத்த பதில், பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிசிசிஐ மீட்டிங்கில் பேசிய திலக் வர்மா, ‘‘அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப தான் ஆட முடியும். என்னால், முதல் பந்தில் இருந்தே பவுண்டரி, சிக்ஸர்களை அடிக்க முடியும். ஆனால், அணியின் சூழ்நிலை, வெற்றிபெற எப்படி ஆட வேண்டும் என்பதை கணித்துதான் நான் விளையாடி வருகிறேன். அணிதான் எனக்கு முதன்மை’’ எனக் கூறியிருக்கிறார். இதனை கேட்ட பிசிசிஐ நிர்வாகிகள், உடனே திலக் வர்மாவுக்கு, நன்றி, வணக்கம் எனக் கூறி அனுப்பி வைத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, திலக் வர்மா ஆடுவது பினிஷர் இடத்தில். ஆனால், அவர் கூறும் பதில், ஒரு விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. குறிப்பாக, அணிதான் எனக்கு முக்கியம், சூழ்நிலையை கணித்து ஆடுகிறேன் எனக் கூறி, கேப்டன் பதவிக்கு அடிபோடுவதைப் போலதான், திலக் வர்மா பேஞ்சியிருக்கிறாரே தவிர, அவர் பேசியதில், வேறு எந்த அர்த்தமும் இல்லை என பிசிசிஐ நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இனி திலக் வர்மாவை தேர்வு செய்யக் கூடாது எனவும் பிசிசிஐ நிர்வாகிகள் முடிவு செய்திருப்பதாகவும், திலக் வர்மாவுக்கு மாற்றாக இனி ராஜத் படிதரை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சில அதிரடி நடவடிக்கைகளையும் டி20 பார்மெட்டில் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
