காமராஜர் காலை உணவு திட்டம்: தன்னார்வ அமைப்புகளுக்கு டெண்டர் அழைப்பு -தமிழக அரசு – tamilnadu govt announced kamarajar breakfast scheme food supplier tender

தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நகர்ப்புற வாழ்வாதாரக் குழுக்கள், சமூக சேவை அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை ஜூலை 27-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காலை உணவு திட்டத்தின் பெயர் மாற்றம்

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசுத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் காலை உணவுத்திட்டத்தை கொண்டு வந்தார். இந்த நிலையில், காலை உணவு திட்டத்தை காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் தவெக….கோட்டை விடும் அதிமுக?

உணவு வழங்க டெண்டர் வெளியீடு

இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இனி இந்த திட்டம் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்ற பெயரில் செயல்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கும் அமைப்புகளை தேர்வு செய்ய டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டெண்டரில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நகர்ப்புற வாழ்வாதார குழுக்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு தரமான காலை உணவை தொடர்ந்து வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

காமராஜர் பெயரில் புதிய அறிவிப்பு

இந்த விரிவாக்கத்துடன், முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த திட்டம் செப்டம்பர் 17 முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் வருகை மற்றும் உணவு பெறும் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஒரு மாணவருக்கு தினசரி ரூ.12.71 செலவில், 210 வேலை நாட்களுக்கு ரூ.343.55 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. தற்போதைய தமிழக அரசு, காலை உணவு திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 15,454 பள்ளிகளில் பயிலும் சுமார் 15.14 லட்சம் மாணவர்கள் கூடுதல் பயன் பெற உள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு காலங்களில் சத்துணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வந்துள்ளது. ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ந்து வர வேண்டும் என்ற நோக்கில், அப்போதைய முதலமைச்சர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த முயற்சி பள்ளி சேர்க்கை விகிதத்தை உயர்த்திய முக்கிய திட்டமாக அமைந்தது.

காலை உணவு திட்டத்தின் விரிவாக்கம்

அதனைத் தொடர்ந்து, 1982-ஆம் ஆண்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய சத்துணவு திட்டத்தை செயல்படுத்தினார். பின்னர் கருணாநிதி ஆட்சியில் சத்துணவுடன் முட்டையும் சேர்க்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அரசும் இந்த திட்டத்தை பல்வேறு வகைகளில் மேம்படுத்தியது.

பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில், அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்த திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் மூலம் 37,447 பள்ளிகளில் பயிலும் 19.34 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

Source link