நீட் விவகாரம்: டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி – ஜூலை 27-ல் விசிக மாநில தழுவிய போராட்டம் அறிவிப்பு – delhi neet students protesting on lathi-charge vck announces state-wide protest for july 27

நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்டவற்றிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு பேரணியில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு போராட்டம்

இதற்கு அனுமதி அளிக்காத காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி கூறினர். இருப்பினும் மாணவர்கள் மற்றும் சி ஜே பி கட்சியினர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் அவர்களை கலைக்க தடியடி நடத்தியும் கண்ணீர் புகை கொண்டு வீசியும் விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திமுக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஜலீல்!

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களான திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவளித்தது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் போராட்ட களத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் வந்து ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து நிலைமை மோசமானதால் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை வலு கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தது.

திருமாவளவன் மாணவர்கள் சந்திப்பு

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருப்பினும் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றன இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு ஆதரவு அளித்தார் இதனைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி இளைஞர்களின் கோரிக்கைகளை ஆதரித்தும் வரும் 27ஆம் தேதி அனைத்து தொகுதிகளிலும் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

இது குறித்து அக்கட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தை கலைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பல மாணவர்கள் காயமடைந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீது வன்முறை நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஜூலை 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இதில் ஜனநாயக சக்திகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link