Credit Card Tips,கிரெடிட் கார்டு பில் செலுத்தினாலும் பிரச்சினை: காரணம் என்ன தெரியுமா? – credit score may drop even if we pay credit card bills on time know why

இந்தியாவில் இப்போது கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் அதை அதிகமான அளவில் பயன்படுத்தி ஷாப்பிங் செய்கின்றனர். பெரும்பாலானோர் கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க, தங்கள் கிரெடிட் கார்டு பில்களைச் சரியான நேரத்தில் செலுத்துகின்றனர். சரியான நேரத்தில் பில்களைச் செலுத்துவது தங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

ஆனால், கிரெடிட் கார்டுக்கான முழு பில்களையும் சரியான நேரத்தில் செலுத்திய பிறகும், உங்கள் சிபில் ஸ்கோர் குறைவது போல் தோன்றலாம். இதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. நல்ல சிபில் ஸ்கோரைப் பெறுவதற்குச் சரியான நேரத்தில் பணம் செலுத்துவது மட்டும் போதாது. உங்கள் கிரெடிட் கார்டை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம். எனவே, கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியம்.

சரியான நேரத்தில் பணம் செலுத்திய பிறகும் சிபில் ஸ்கோர் ஏன் குறைகிறது?

சரியான நேரத்தில் கிரெடிட் கார்டு பில்களைச் செலுத்திய பிறகும் சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அதிக கிரெடிட் பயன்பாடு ஆகும். அதாவது, உங்கள் கிரெடிட் கார்டு வரம்பிற்கு மிக நெருக்கமாகவோ அல்லது அதிகமாகவோ நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்று அர்த்தம். உதாரணமாக, உங்கள் கார்டு வரம்பு ரூ. 1,00,000 ஆக இருந்து, நீங்கள் ரூ. 80,000 முதல் ரூ. 90,000 வரை செலவு செய்தால் அது உங்கள் சிபில் ஸ்கோரைப் பாதிக்கும். அதேபோல, கிரெடிட் கார்டிலிருந்து ரொக்கப் பணத்தை எடுப்பதும் உங்கள் சிபில் ஸ்கோரைக் குறைக்கலாம்.

ஏனெனில், நீங்கள் அதிகத் தொகையைச் செலவிடும்போது, ​​கடன் வசதிகளை அதிகம் சார்ந்திருப்பவராக கடன் தகவல் நிறுவனம் உங்களை நினைத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க, உங்கள் கிரெடிட் கார்டு வரம்பில் 30 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், கிரெடிட் கார்டிலிருந்து ரொக்கப் பணத்தை எடுப்பதையும் முடிந்தவரை தவிர்க்கலாம்.

முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்!

கிரெடிட் கார்டில் தாமதக் கட்டணங்களைத் தவிர்க்க சிலர் முழுத் தொகைக்குப் பதிலாகக் குறைந்தபட்சத் தொகையை மட்டுமே செலுத்துகின்றனர். இது ஒவ்வொரு மாதமும் அவர்களின் கடன் சுமையையும், அதற்கான வட்டியையும் அதிகரிக்கிறது. குறைந்தபட்சத் தொகையை மட்டும் செலுத்துவது உங்கள் சிபில் ஸ்கோரைப் பாதிப்பதோடு உங்கள் கடன் வரலாற்றையும் சேதப்படுத்தலாம். எனவே, உங்கள் முழு கிரெடிட் கார்டு பில் தொகையையும் செலுத்துவது முக்கியம்.

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

உங்களுடைய கிரெடிட் கார்டு பில்லில் குறைந்தபட்சத் தொகையை மட்டும் செலுத்தினால் மீதித் தொகைக்கு 30 சதவீதம் முதல் 42 சதவீதம் வரை ஆண்டு வட்டி விதிக்கப்படும். எனவே எப்போதும் முழுத் தொகையையும் செலுத்துவது நல்லது. அதேபோல, கடைசி தேதிக்கு 2 நாட்களுக்கு முன்பே பணம் செலுத்துவது பாதுகாப்பானது. சில வங்கிகளில் பணம் வரவு வைக்க சில மணி நேரங்கள் ஆகலாம். கிரெடிட் கார்டு பில்களைத் தவறாமல் சரியான நேரத்தில் செலுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும்.

Source link