முதல்வர் விஜய்யின் கடைசி.. படம் ஜனநாயகன் பார்த்து கதறி அழுத தவெக அமைச்சர்கள் .. வைரலாகும் வீடியோ – tvk ministers wept after watching leader vijay’s film fdfs jananayagan

முதலமைச்சர் விஜயின் ஜனநாயகம் திரைப்படம் இன்று வெளியானது திரையரங்குகளில் இதை பார்த்த அமைச்சர் பர்வேஸ் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கதறி அழுத சம்பவம் இதயத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு என்று ஜூலை 23ஆம் தேதி உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது விஜயின் திரையுலக பயணத்தின் இறுதி திரைப்படம் என்ற காரணத்தினால் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் அதிகாலை முதலில் திரையரங்குகளில் குவிந்தன பல இடங்களில் திரையரங்குகளுக்கு முன்பு பட்டாசு வெடித்தும் மேல தாளங்கள் முழங்கியும் இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

குறிப்பாக ஜனநாயகன் திரைப்படம் கடந்த மே மாதம் 9-ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவது சிக்கல் ஏற்பட்டது மேலும் தணிக்கை சான்றிதழ் பெற நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இதற்கிடையே ஜனநாயகன்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நடந்தது.

இன்று ரிலீஸான ஜனநாயகன் திரைப்படம்

அந்த வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பொதுமக்கள் என உற்சாகமாக படத்தை பார்ப்பதற்காக திரையரங்குகளை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்களும் பொதுமக்களுடன் சேர்ந்து முதல் ஷோவை பார்த்து வருகின்றனர்.

டைட்டில் கார்டு வந்ததும் தேம்பி மதியழகன்

மறுபுறம் மறுப்புரம் முதலமைச்சர் விஜயின் கடைசி பாடம் என்பதால் கரூரில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுடன் தமிழக வெற்றி கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் திரைப்படத்தின் டைட்டில் கார்டு வந்ததும் தேம்பி அழுதார். முன்னதாக கரூர் சம்பவத்தில் கைதாகி சிறை சென்ற மதியழகனுக்கு கரூர் தொகுதியின் வேட்பாளராக விஜய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திரையரங்கில் கதறி அழுத அமைச்சர் பர்வேஸ்

மேலும் ஜனநாயகன் திரைப்படம் வெற்றிபெற வேண்டும் தவெகவினர் கோவில்களில் பிராத்தனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஜனநாயகன் திரைப்படத்தை அமைச்சர் பார்வை சென்று பார்வையிட்டார். அப்போது விஜயின் அறிமுக காட்சி வரும் பொழுது அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் வடித்தார். ஒரு கட்டத்தில் ஜனநாயகன் படத்தில் விஜய் வருவதை பார்த்து கண்ணீரை பொருட்படுத்த முடியாமல் கதறி அழுதார். இதனை பார்த்து அருகில் இருந்த அவரது உதவியாளர் அதிர்ச்சி அடைந்தார்.

விமர்சனத்திற்கு உள்ளான அமைச்சர்களின் கண்ணீர்

கடந்த ஒரு வாரத்தில் மேலாக டெல்லியில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் , நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என்று நேற்று விஜய் குரல் கொடுத்தார். இந்த சூழலில் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்து அமைச்சர்கள் கண்ணீர் வடிப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Source link