ஜனநாயகன் பார்க்க ஒரே மாதிரி உடையில் வந்த த்ரிஷா, கீர்த்தி சுரேஷ்: குமுறிக் குமுறி அழுத அமைச்சர் பர்வேஸ் – trisha, keerthy suresh watch thalapathy vijay starrer jananayagan

கீர்த்தி, த்ரிஷா: விஜய்யை லாஸ்ட்டா ஒரு வாட்டி பார்த்திருக்கிறோம் என்று அவரின் ரசிகர்கள் மட்டும் அல்ல திரையுலகினரும் ஜனநாயகன் படம் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். நான்லாம் முதலில் விஜய்யின் தீவிர ரசிகை அதன் பிறகு தான் நடிகை என்று பெருமையாக சொல்லும் கீர்த்தி சுரேஷோ தன் கணவர் ஆண்டனி தட்டிலுடன் வெற்றி தியேட்டருக்கு சென்று ஜனநாயகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார்.
அவர் மட்டும் அல்ல முதல்வர் விஜய்யின் மற்றொரு தீவிர ரசிகையும், ராசியான ஹீரோயினுமான த்ரிஷா கிருஷ்ணன் ரோகினி தியேட்டரில் ஜனநாயகன் பார்த்திருக்கிறார். த்ரிஷா மட்டும் அல்ல அவரின் அம்மா உமாவும் தியேட்டருக்கு வந்திருந்தார். உமாவை பார்த்த ரசிகர்களோ, உங்களுக்கு 70 வயசுனு சத்தியமா நம்ப முடியவில்லை மம்மி என்கிறார்கள்.

உடை ஒற்றுமை: ஊதா கலரு ஜீன்ஸ், வெள்ளை நிற டி சர்ட், கூலிங் கிளாஸ் அணிந்து வந்தார் த்ரிஷா கிருஷ்ணன். கீர்த்தி சுரேஷ் கூட அதே காம்பினேஷனில் உடை அணிந்து த்ரிஷா மாதிரியே கூலிங் கிளாஸ் போட்டிருந்தார். இதை கவனித்த ரசிகர்களோ, தளபதி ரசிகைகள் இரண்டு பேருக்கும் இருக்கும் ஒற்றுமையை பார்த்தியா என்று பேசுகிறார்கள்.
அழுத அமைச்சர்: விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் புஸ்ஸி ஆனந்தும் ஜனநாயகன் FDFS பார்த்திருக்கிறார். மேலும் அமைச்சர் பர்வேஸும் விஜய்ணா படத்தை தியேட்டரில் பார்த்துள்ளார். அப்பொழுது அவர் தாரை தாரையாக கண்ணீர் விட அதை பலரும் வீடியோ எடுத்துவிட்டார்கள். அமைச்சர் ஏன் இப்படி குமுறிக் குமுறி அழுதிருக்கிறார்?. இவர் பெரிய விஜய் வெறியனாக இருப்பார் போன்று. யாராச்சும் அவருக்கு ஆறுதல் சொல்லுங்களேன் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
தயாரிப்பாளர் தெளிவு: ஜனநாயகன் படத்தின் டைட்டில் கார்டு போட்டதுமே விஜய் ரசிகர்கள் பரம திருப்தி அடைந்துவிட்டார்கள். அதாவது வெறும் தளபதி என்று விஜய் சொன்னது மாதிரி இல்லாமல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் என டைட்டில் கார்டு இருக்கவே தளபதி ரசிகர்களுக்கு தங்கள் கோரிக்கை நிறைவேறிய சந்தோஷம். ஆக, விஜய்ணாவை மட்டும் அல்லாமல் அவர் ரசிகர்களையும் திருப்திபடுத்திவிட்டார் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா.

எக்ஸ் விமர்சனம்: ஜனநாயகன் படம் வேற லெவலில் இருக்கிறது. படம் முழுக்க மாஸ் காட்டியிருக்கிறார் விஜய்ணா. பகவந்த் கேசரியை அண்ணாவுக்கு ஏற்றது மாதிரி எடுத்திருக்கிறார் வினோத். எங்களுக்கு இது போதும் என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்கள் தளபதி ரசிகர்கள்.

விஜய் ஆசை: விஜய்ணா ஏன் தன் கடைசி படத்திற்கு போய் ரீமேக்கை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. பகவந்த் கேசரி மாஸ் படம் தான். ஆனாலும் வினோத்தின் ஒரிஜினல் கதையில் நடித்திருக்கலாம் என்கிறார்கள் சிலர். வினோத் தான் எழுதிய கதையை விஜய்யிடம் தெரிவித்தபோது அது ஹெவியாக இருப்பதாக கூறி பகவந்த் கேசரியை பார்க்குமாறு தெரிவித்திருக்கிறார்.

விஜய் சொன்னது மாதிரியே பகவந்த் கேசரி பார்த்து அதை ஜனநாயகனாக எடுத்திருக்கிறார். ஜனநாயகன் படம் லீக்கானபோது விஜய் ரொம்ப ஆறுதலாக பேசியதாக கூறியிருக்கிறார் ஹெச். வினோத்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

அது மட்டும் அல்ல அரசியல், சினிமா ஆகியவற்றை பிரித்துப் பார்க்கும் மெச்சூரிட்டி விஜய்க்கும், பிரகாஷ் ராஜுக்கும் இருப்பதாக பாராட்டியிருக்கிறார் ஜனநாயகன் இயக்குநர்.
Source link