ஒரு வாக்கில் தோல்வி.. திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு வாபஸ்: பின்னணி என்ன? – dmk periyakaruppan withdraws postal vote recount case against tvk srinivasa sethupathi mla

தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை, திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் திரும்பப் பெற்றார் .இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை பிடித்து தனி பெரும் கட்சியாக ஒரு விடுதலை இருப்பினும் ஆட்சி அமைக்க 118 என்ற தனி பெரும்பான்மை இல்லாததால் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் சீனிவாச சேதுபதி போட்டியிட்டார்.

திருப்பத்தூர் தொகுதி 1 வாக்கு வெற்றி வழக்கு

இவருக்கு எதிராக அதே தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். 4-ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார்.இதனை தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இதனை எடுத்து திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

திமுக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஜலீல்!

தபால் வாக்கு மறு எண்ணிக்கை

இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் தவறுதலாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறி, அவற்றை மீட்டெடுத்து மீண்டும் எண்ண வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. மேலும், இந்த வழக்கு முடியும் வரை தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை நடவடிக்கைகளில், குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதோடு, சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கும் வழக்கு விசாரணைக்கும் தற்காலிக தடை விதித்தது.

வழக்கை வாபஸ் பெற்ற பெரியகருப்பன்

பின்னர் நடைபெற்ற விசாரணையில், பெரியகருப்பன் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அவரது தரப்பு மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கியது. அதே நேரத்தில், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், தேவையானால் இரு தரப்பினரும் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தது.
மேலும், வழக்கை சட்ட விதிகளின்படி விரிவாக விசாரித்து உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கலாம் என்றும், இதற்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்குவதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, தவறாக மாற்றி அனுப்பப்பட்ட தபால் வாக்குகளை மீட்டெடுத்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பெரியகருப்பன் தாக்கல் செய்திருந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றார். இதை பதிவு செய்த நீதிமன்றம், அந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. இதன் மூலம் தவெக அமைச்சரவையில் மேலும் ஒரு இடம் அதிகரித்துள்ளதால், தவெகவினர் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Source link