தூத்துக்குடி விசாரணை கைதி அருணாச்சலம் மரணம்: காவல் நிலையத்தில் என்ன நடந்தது? டிஎஸ்பி சுனில் விளக்கம் – thoothukudi arunachalam custodial death dsp sunil explanation

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக இருந்த அருணாச்சலம் உயிரிழந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி டிஎஸ்பி சுனில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே காவல் நிலைய மரணங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது விஜய் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

சட்டவிரோதமாக மதுவிற்பனை

இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞர் மது விற்பனை செய்ததாக கூறி அருணாச்சலம் வயது 26 காவல் துறையினர் விசாரணைக்காக கடந்து 17 ஆம் தேதி காலை கைது செய்துள்ளனர்.

சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் தவெக….கோட்டை விடும் அதிமுக?

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த போது இளைஞர் அருணாச்சலத்திற்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் உடனடியாக சிகிச்சை அளிக்க தூத்துக்குடியில் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கேட்ட உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காவல்துறையினர் தாக்கியதில் தான் தன்னுடைய மகன் அருணாச்சலம் உயிரிழந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

செய்ததாக இளைஞர் அருணாச்சலம் கைது

மேலும் அருணாச்சலத்தின் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய காவல்துறையினரை இது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அருணாச்சலம் காவல்துறையினர் தன்னை தாக்கியதாக வாக்குமூலம் அளித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினரை கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என அருணாச்சலத்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மருத்துவமனையில் திடீர் உயிரிழப்பு

மேலும் இந்த சம்பவத்திற்கு கனிமொழி, நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன் ,எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.இந்த நிலையில் காவல்துறையினர் தாக்கியதில் அருணாச்சலம் உயிரிழந்தாரா? காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தூத்துக்குடியில் டிஎஸ்பி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக கிடைத்த தகவலின் பேரில், அருணாச்சலம் என்பவர் 120 மதுபாட்டில்களுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

தூத்துக்குடி டிஎஸ்பி விளக்கம்

கைது செய்யப்பட்டபோது அவர் உடல்நலக்குறைவு ஏதுமின்றி நலமாக இருந்ததாகவும், பின்னர் விசாரணைக்காக தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறினார்.காவல் நிலையத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே அருணாச்சலம் திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும், உடனடியாக அவருக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் டிஎஸ்பி தெரிவித்தார்.

இந்த சம்பவம் முழுவதும் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.அருணாச்சலம் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் உண்மை நிலை குறித்து முழுமையான விசாரணைக்குப் பிறகே அடுத்தகட்ட தகவல்கள் வெளியிடப்படும் என்றும் டிஎஸ்பி சுனில் தெரிவித்தார்.

Source link