ட்ரம்ப் பின்னால் யார் அது? அமெரிக்க அதிபர் மாறி அச்சு அசலா ஆக்‌ஷன்- ஜார்ஜியாவில் தீயாய் பரவும் வீடியோ – us president donald trump georgia campaign rally goes viral with expressions of man behind him

ஜார்ஜியாவில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசும் போது, அவரது பின்னால் சைகை செய்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யாருபா அது, ட்ரம்ப் மாதிரி அப்படியே செய்கிறாரே. எதும் கிண்டல் பண்றாரா எனக் கேட்கும் வகையில் அமைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசும் முக பாவனைகள், உடல்மொழி, கைகளின் செய்கைகள் தனித்துவமாக இருக்கும். இதை வைத்து மீம்ஸ்கள், ட்ரோல்களும் ஏராளமாக அரங்கேறி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ட்ரம்ப் போலவே ஒருவர் லைவில் சில நிமிடங்கள் சைகை காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதுவும் அதிபர் பேசும் போது அவருக்கு பின்னால் இருந்த படியே செய்து காண்பித்திருக்கிறார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள மாரியிட்டா நகரில் வீலர் உயர்நிலைப் பள்ளியில் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ட்ரம்ப் போல செய்கை காட்டிய அமெரிக்க இளைஞர்

இதில் கலந்து கொண்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் போர் விவகாரம் குறித்தும், எதிர்க்கட்சிகள் குறித்தும் பல்வேறு விஷயங்களை பேசினார். இந்நிலையில் அதிபரை படம்பிடித்த கேமரா, அவருக்கு பின்னால் இருந்த பார்வையாளர்களையும் படம்பிடித்தது. அதில் கருப்பு நிற சூட், சிவப்பு நிறத்தில் டை அணிந்து கொண்டு அமர்ந்திருந்த ஒருவர், ட்ரம்ப் போல செய்கை காட்ட தொடங்கினார்.

அதாவது, ட்ரம்ப் தலையை சாய்த்து கொண்டே பேசுவது போல, இரு கைகளையும் அருகில் கொண்டு வந்து பின்னர் விலக்கி கொள்வது போல செய்தார். அதுவும் டிரம்ப் பேசுவதற்கு வாய் அசைப்பது போல தொடர்ச்சியாக பின் தொடர்ந்தார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து சரமாரியாக கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியா-அமெரிக்கா உறவுகள்:TRUMP நடவடிக்கைகள் மாற்றங்கள்

வைரலாகும் ஜார்ஜியா சம்பவ வீடியோ

ட்ரம்ப் பேசுவதை காட்டிலும் பின்னால் நபர்ந்திருக்கும் நபரின் சைகை மிகுந்த சுவாரஸியமாக இருக்கிறது. நல்ல பொழுதுபோக்கு. ஆனால் இது தவறு என்று குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை டொனால்ட் ட்ரம்பின் தீவிர ரசிகராக இருக்கலாம். கிண்டல் செய்யும் நோக்கத்தில் நிச்சயம் செய்திருக்க மாட்டார் என்கின்றனர். அடுத்ததாக ஒருவர், அந்த நபருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என்று கொஞ்சம் ஓவராக புகழாரம் சூட்டிவிட்டார். ஒரு கோமாளியின் செய்கைகளை அப்படியே செய்து அவ்வளவு சாதாரண காரியமா என்ன? எனக் கேட்கின்றனர்.

குவியும் நெட்டிசன்களின் விமர்சனம்

டொனால்ட் ட்ரம்ப் போல செய்து காட்டுவது பெரிய சிரமம் ஏதுமில்லை. எல்லா நேரங்களில் ஒரே மாதிரியான உடல் மொழியை தான் வெளிப்படுத்துகிறார். ஒருமுறை பார்த்தாலே போதும். கச்சிதமாக ஒட்டிக் கொள்ளும் எனக் குறிப்பிடுகின்றனர். மற்றொருவர் குறிப்பிடுகையில், இது முட்டாள்தனமான விஷயம். அவர் வெறும் ட்ரம்ப் அல்ல. அமெரிக்காவின் அதிபர். அவரது பதவிக்கு, நாற்காலிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. எனவே கிண்டல் செய்வது மிகவும் தவறானது எனத் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். ட்ரம்பை எப்படி கிண்டல் செய்யும் வகையில் பொதுவெளியில் செயல்பட முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.இந்த வீடியோ தொடர்பாகவோ, கவனம் பெற்ற நிகழ்வு தொடர்பாகவோ வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.

Source link