தூத்துக்குடியில் விசாரணைக் கைதி உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

நீதி வேண்டும்

இன்றைய பொய்க்கால் குதிரை அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல் மரணங்களும் குதிரை வேகத்தில் அதிகரிப்பது மிகுந்த வேதனைக்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.

மடப்புரம் அஜித்குமார் மரணத்தின் போது “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று பதாகை பிடித்த இன்றைய முதல்-அமைச்சர், தனது ஆட்சியில் நடக்கும் தொடர் காவல் மரணங்களுக்கு என்ன பதில், நீதி வைத்துள்ளார்?

பாரபட்சமின்றி நடவடிக்கை

அருணாச்சலம் மரணத்தின் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு யார் இழைத்திருந்தாலும், எந்த பாரபட்சமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link