திலக் வர்மாவை நீக்கிவிட்டு, இனி ரெகுலராக இந்த வீரரை சேர்க்க பிசிசிஐ முடிவு: முழு விபரம் இதோ – bcci want to replace tilak varma from indian t20i team

இந்திய டி20 அணியில், தொடர்ச்சியாக சொதப்பி வரும் திலக் வர்மாவுக்கு, ரெகுலராக இடம் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், 120 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே ரன்களை அடித்த அவருக்கு, அதன்பிறகும் ரெகுலராக இடம் வழங்கப்பட்டது. ஆனால், அதன்பிறகும் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார்.

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 21 பந்தில் 19 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 46 பந்தில் 55 ரன்களையும் அடித்து சொதப்பினார். அதாவது, திலக் வர்மா, அயர்லாந்துக்கு எதிராக பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை அடிக்காததும், தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், திலக் வர்மா சிறப்பாக செயல்படவில்லை. முதல் போட்டியில் 13 பந்தில் 13 ரன்களை அடித்த அவர், அதன்பிறகு 11 பந்தில் 24 ரன்களையும், 11 பந்தில் 3 ரன்களையும், 8 பந்தில் 11 ரன்களையும் அடித்த அவர், கடைசி டி20 போட்டியில் 25 பந்துகளில் 53 ரன்களை அடித்தார். அதுவும், ஜோப்ரா ஆர்ச்சர், திலக் வர்மா கேட்சை விட்டதால்தான், திலக் வர்மாவால் அரை சதம் அடிக்க முடிந்தது.

இப்படி, திலக் வர்மா தொடர்ச்சியாக சொதப்பும் நிலையில், அவரை மிடில் வரிசையில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கேப்டன் ராஜத் படிதரை சேர்க்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இனி தேர்வு செய்யப்படும் டி20 அணிகளில், திலக் வர்மாவை நீக்கிவிட்டு, ராஜத் படிதரை சேர்த்து, துணைக் கேப்டன் பதவியையும் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம்.

மேலும், இனி டி20 பார்மெட்டில், இளம் வீரர்களுக்கு முக்கியத்தும் கொடுக்காமல், திறமையுள்ள சீனியர் வீரர்களையும் சேர்க்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருக்கும் க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார் போன்றவர்களை மீண்டும் இந்திய டி20 அணிக்குள் கொண்டுவர சாத்தியம் இருக்கிறதா என ஆராய, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கருக்கு பிசிசிஐ நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திலக் வர்மா அபாரமாக ஆடினாலும், வாய்ப்பில்லை: இந்திய டி20 அணி, தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இத்தொடரில், திலக் வர்மா சதமே அடித்தாலும், அவருக்கு அடுத்து வாய்ப்பு கொடுக்க கூடாது என்ற முடிவில் பிசிசிஐ இருக்கிறதாம். காரணம், ஐபிஎலில் தொடர்ச்சியாக 2 முறை கோப்பை வென்ற ராஜத் படிதருக்கு மிடில் வரிசையில் இடம் கொடுக்க உறுதியாக இருக்கிறார்களாம்.

சமீபத்தில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி அபாரமாக செயல்பட்டு, மெகா வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 125/7 ரன்களை அடித்த நிலையில், இந்திய அணி, 13.2 ஓவர்களிலேயே 126/3 ரன்களை எடுத்து பார வெற்றியைப் பெற்று அசத்தியது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டி, வரும் 25ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link