‘இந்திய டி20 அணியின்’, அடுத்த கேப்டன் இவர்தான்? 33 வயது வீரரை தேர்வு செய்த பிசிசிஐ: என்ன காரணம்? – bcci selected indian t20 team next captain after shreyas iyer

டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு பிறகு, இந்திய டி20 அணியில், அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பேட்டிங், பந்துவீச்சு இடங்களில், இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

இப்படி, டி20 அணியில் இருந்து சூர்யகுமார் யாதவ் போன்ற சீனியர்களை வெளியேற்றி, இளம் வீரர்களை கொண்டு வந்திருக்கும் நிலையில், அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர், அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என எதிலும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.

இதனால், கடும் அதிருப்தியடைந்துள்ள பிசிசிஐ, டி20 அணியின் செயல்பாடு குறித்து, விரிவாக ஆலோசிக்க, உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அப்போது, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு போதிய அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதாவது, ஷ்ரேயஸ் ஐயருக்கு இன்னமும் 2-3 டி20 தொடர்கள் அவகாசம் கொடுத்து, அவரது கேப்டன்ஸி திறமையை சோதித்து பார்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

திலக் வர்மா நீக்கம்: மேலும், இனி தேர்வு செய்யப்படும் டி20 அணிகளில் திலக் வர்மாவை சேர்க்க கூடாது எனவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம். மிடில் வரிசையில் ஆடும் திலக் வர்மா தொடர்ச்சியாக குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுகிறார். எப்போதாவதுதான், பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுகிறார் என்பதால், திலக் வர்மாவை நீக்கிவிட்டு மாற்றாக திறமையான வீரருக்கு மிடில் வரிசை இடத்தை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

யார் அந்த வீரர்? திலக் வர்மாவுக்கு பதில் யாரை சேர்ப்பது என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்திய நிலையில், இறுதியில், ராஜத் படிதர் பெயரை பிசிசிஐ தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜத் படிதருக்கு தற்போது 33 வயதாகிறது. டி20 உலகக் கோப்பை 2028 தொடர் வரை, படிதரால் ஆட முடியும் என்பதால், படிதரை சேர்த்து, அவருக்கு துணைக் கேப்டன் பதவியையும் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

மேலும், கேப்டன்ஸியில் ஷ்ரேயஸ் ஐயர் சொதப்பும் பட்சத்தில், ஷ்ரேயஸ் ஐயரை வெளியேற்றிவிட்டு, மாற்றாக படிதருக்கு கேப்டன் பதவியையும் வழங்கவும் பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜத் படிதர் செயல்பாடு: ஐபிஎல் 2026 சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிநடத்திய ராஜத் படிதர், 15 போட்டிகளில் 41.75 சராசரி, 192.69 ஸ்ட்ரைக் ரேட்டில் 501 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். இப்படி, மிடில் வரிசையில் படிதரால் அபாரமாக செயல்பட முடிகிறது என்பதால்தான், அவரை உடனே இந்திய அணிக்குள் கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

மேலும், ஐபிஎலில் அபாரமாக செயல்பட்ட சீனியர் வீரர்கள் புவனேஷ்வர் குமார், க்ருணால் பாண்டியா போன்ற சீனியர் வீரர்களை, மீண்டும் டி20 அணிக்குள் கொண்டுவர சாத்தியம் இருக்கிறதா என்று ஆராய, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டெஸ்ட் அணியை வலுப்படுத்த சர்பரஸ் கான் போன்ற முழுநேர டெஸ்ட் பேட்டர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து, அறிக்கை கொடுக்கவும், அகார்கரிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link