முதல்வர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இது கடந்த ஜனவரின் மாதமே வெளியாக இருக்க வேண்டியது. ஆனால், திரைப்படத்திற்கு சென்சார், வழங்குவதில் சிக்கல், சில காட்சிகளை நீக்குவகு போன்ற பிரச்சனைகள் எழுந்தனர்.
ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியீடு
மேலும் இந்த படத்திற்கு மத்திய தனிக்கை வாரியம் UA சான்றிதழ் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.மறுப்புறம் ஜனநாயகன் திரைப்படம் வெளியிடுட விடாமல் பாஜக, திமுக அரசியல் செய்வதாக பொதுவெளியில் குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தனிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியது.
இந்த நிலையில், பல்வேறு தடைகளுக்கு பிறகு நேற்று ஜனநாயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.தமிழகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் நேற்று காலை 9 மணிக்கு வெளியானது. படம் வெளியானதை முன்னிட்டு பல்வேறு திரையரங்குகள் திருவிழா சூழலை ஒத்த வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
முதல்வர் விஜய் கடைசி படம் தவெக அமைச்சர் கண்ணீர்
விஜயின் திரைப்பயணத்தின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் முதல் காட்சியையே கண்டு ரசித்தனர். மேலும், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று விஜய் அறிவித்துள்ள நிலையில், படத்தை பார்த்த சில அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பேசுபொருளாக மாறியுள்ளன.
இந் த நிலையில் விருதாசலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர். மக்கள் விருப்பத்தை தான் அரசு செய்ய வேண்டும் நீட் வேண்டாம் என மக்கள் கோரிக்கை வைத்தார்கள் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரேமலதா சொன்ன கருத்து
நீட் தேர்வு ரத்து செய் கோரி இன்று இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாகத்தான் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஒன்றிய அமைச்சர் பதவி விலக வேண்டும் கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் போராடிம் வருகின்றனர் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனை பார்த்து தவெக அமைச்சர்கள் அழுதது குறித்த கேள்விக்கு ? ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியானது அவரது இறுதி படம் வெளியானதால் ரசிகர்கள் பார்த்துள்ளனர். மேலும் அமைச்சர்கள் அழுகை குறித்து கேள்வி எழுப்பியதற்கு நோ கமெண்ட்ஸ் என தெரிவித்தார்.
