விஜய் கட்சியுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் தொகுதி பங்கீடு எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றியும் டெல்லியில் விளக்கியுள்ளார்.
டெல்லியில் அமித் ஷா – ஈபிஎஸ் சந்திப்பு
அதில், அதிமுக – பாஜக இடையிலான தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரவு 10 மணியளவில் அமித் ஷாவை சந்தித்து பேசினேன். தமிழக அரசியல் சூழல் குறித்து கலந்தாலோசித்தேன். தொகுதி பங்கீடு குறித்து பேச பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார்.
அன்புமணி அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார், ராமதாஸ் சிக்னல் என்ன_ கூட்டணி யாருடன்_
இன்னும் நான்கு நாட்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விடும். எங்கள் கூட்டணியை பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பிருக்கிறது என்பதை பொறுத்து பேசி முடிவெடுக்கப்படும். தவெக விவகாரத்தில் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இதனை எங்கள் தரப்பிலும் உறுதி செய்துவிட்டோம். அவர்கள் தரப்பிலும் உறுதி செய்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு
மீடியாவில் தான் காரசாரமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் தெளிவாக தான் இருக்கிறோம். எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கிறது. இரண்டு தரப்பு தலைவர்களும் இதுபற்றி பேசவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன் என்றார். 2026 தேர்தல் பிரச்சாரம் குறித்து கேட்கையில், முதலில் தொகுதி பங்கீடு முடியட்டும். அதன்பிறகு யாருக்கு எந்த தொகுதி என்பது இறுதி செய்யப்படும். வேட்பாளர்கள் தேர்வை தொடர்ந்து பிரச்சார திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படும்.
கூட்டணிக்கு சேரும் கட்சிகள் திமுக அல்லது அதிமுக தலைமையிலான அணியில் சேர்ந்துவிட்டன. இனிமேல் புதிய கட்சிகள் சேருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அடுத்ததாக டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தமிழக சூழல் குறித்து பேசுவதற்கு வரலாம். தேமுதிக கூட்டணிக்கு வராததால் எஞ்சியுள்ள இடங்களை அமமுக, பாமகவிற்கு கூடுதலாக வழங்க வாய்ப்பிருக்கிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு வீண் கற்பனைகள் வேண்டாம்.
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
இன்னும் 4 நாட்களில் அனைத்தும் தெரிந்துவிடும். இது திமுக தலைமையில் அமைந்த கூட்டணி மாதிரி கிடையாது. சைலண்டாக அழகாக பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்வோம். எந்தவித சிக்கலும் இல்லை. எங்களுக்குள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செயல்பட்டு வருகிறோம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
அதிமுக ஏற்கனவே 31 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளது. பல தேர்தல்களை சந்தித்துள்ளது. எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மத்திய அரசு மூலமாகவும், மாநில அரசும் நல்ல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவுமே அறிமுகம் செய்யப்படவில்லை. சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
