ஜனநாயகனில் விஜய் சாரோட சேர்ந்து நடிச்சேன், என் சீன் வரல, தூக்கிட்டாங்க: ஆனந்தி கண்ணீர் – actress anandhi gets emotional as her scene is not there in vijay jananayagan movie

ஜனநாயகன் ஃபீல்: முதல்வர் ஜோசப் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படம் ஜூலை 23ம் தேதி அதாவது நேற்று ரிலீஸாகி உலக அளவில் ரூ. 78 கோடி வசூல் செய்திருக்கிறது. படம் முடிந்து தியேட்டரில் இருந்து வெளியே வந்த விஜய் ரசிகர்களின் கண்களில் கண்ணீர் இருந்தது. இனியும் விஜய்ணாவை பார்க்க முடியாது என்கிற ஒரே காரணத்தால் துக்கம் தாங்காமல் அழுதிருக்கிறார்கள்.

அப்படி ஜனநாயகன் பார்த்து பயங்கரமாக அழுதவர்களில் ஒருவர் நடிகை ஆனந்தி. ஹெச். வினோத் இயக்கிய அந்த படத்தில் அதுவும் விஜய் உடன் சேர்ந்து ஒரே ஃபிரேமில் நடித்தவர். தளபதியுடன் நடித்துவிட்டோமே என்று ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பியதும் சந்தோஷப்பட்டவர் நேற்று ஜனநாயகன் படம் பார்த்து ஏமாற்றம் அடைந்துவிட்டார்.

ஆனந்தி வருத்தம்: படம் பார்த்த பிறகு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆனந்தி. கண் கலங்கியபடி அவர் கூறியிருப்பதாவது,நான் நிறைய படங்களில் நடிக்கிறேன். ஆனால் எடிட்டில் போயிடுது. அதற்காக நான் வருத்தப்பட்டது கிடையாது. ஆனால் ஜனநாயகனில் நான் நடித்த காட்சியை எடிட் செய்தது ரொம்ப வருத்தமாக உள்ளது. நான் கம்பேக் கொடுத்த போது நடிக்க ஒப்புக் கொண்ட முதல் படம் ஜனநாயகன்.
இந்த ரிலீஸுக்காக ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்தேன். அதுவும் சாருடன் காம்பினேஷன் காட்சி. சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் படம் நடிக்க வந்தேன். ஜனநாயகன் சூப்பராக இருக்கிறது. எல்லோரும் பாருங்க. அடுத்து அவர் படத்தில் நடித்தால் முயற்சி செய்து நாம் நடிக்கலாம். ஆனால் இது தான் அவரின் கடைசி படம். சந்தோஷமாக தியேட்டருக்கு சென்றேன். தளபதி காம்பினேஷனில் நம் காட்சி வரும் என்று சந்தோஷமாக போனேன். ரொம்ப அன்லக்கியாக உணர்கிறேன் என்றார்.

கருப்பு ஆனந்தி: தியேட்டரில் இருந்து வந்த போது அவரால் பேசக் கூட முடியவில்லை. விஜய் சார் இனி நடிக்க மாட்டாரே என்று அழுது கொண்டே இருந்தார். ஆனந்தியின் காட்சிகள் நீக்கப்பட்டிருப்பது இது முதல் முறை அல்ல. கடந்த மே மாதம் வெளியான சூர்யாவின் கருப்பு படத்திலும் நடித்திருந்தார் ஆனந்தி. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான அந்த படத்திலும் ஆனந்தியின் காட்சிகள் நீக்கப்பட்டது.
கருப்பு படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ஆனந்தி கூறியிருந்ததாவது, நீக்கப்பட்ட காட்சிகள். இந்த படத்தில் நடித்ததில் ரொம்ப சந்தோஷம். அனுபவம் முக்கியம். இந்த டீமிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். கருப்பசாமி என் காட்சிகள் டெலீட் ஆகிடுச்சு. நீ எது செஞ்சாலும் அதுக்கு கண்டிப்பா காரணம் இருக்கும் கருப்பா. கருப்பசாமி ஐயா. ஆர்.ஜே. பாலாஜிக்கு நன்றி. இந்த மெகா பிளாக்பஸ்டர் படத்தில் ஒரு அங்கமாக இருக்க முடியவில்லையே என்று கஷ்டமாத்தா இருக்கு. கண் வியர்க்கிறது என்றார்.
ஆனந்தியின் போஸ்ட்டுகளை பார்த்த ரசிகர்களோ, தைரியமாக இருக்கவும், விரைவில் உங்களுக்கு நல்லது நடக்கும் என ஆறுதல் கூறியிருக்கிறார்கள். இதற்கிடையே ஜனநாயகன் படம் பார்த்து கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுத அமைச்சர் பர்வேஸ் நேற்று டிரெண்ட் ஆனார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

அவர் மட்டும் அல்ல ரூ. 1000 கோடி சொத்துக்கு அதிபதியான நபர் மேடைக்கு வந்து நான் கஷ்டப்படுகிறேன்னு சொன்னால் அதை கேட்டு மக்கள் பாவப்படுகிறார்கள் என்று சொன்னதால் ஹெச். வினோத்தும் டிரெண்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source link