நடப்பாண்டு வீட்டு வாடகை உயர்வு சென்னைவாசிகளை பெரிதும் சிரமத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. இது அடுத்து வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக கே.கே.நகர், அடையாறு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சொல்லலாம்.
தலைநகர் சென்னையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் வந்து ஏராளமானோர் வசித்து வருகின்றனர். கல்வி, வேலை, வியாபாரம் எனப் பல விஷயங்களுக்கு சென்னையை நம்பியிருக்கின்றனர். எனவே பூர்வகுடி மக்கள் உடன் இடம்பெயர்ந்து வரும் மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் சென்னை இருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் போதிய வசதிகள் உடன் வீடுகள் இருக்கின்றனவா? என்றால் கேள்விக்குறி தான். நாளுக்கு நாள் இடநெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் முறையான பராமரிப்பின்மை, சுகாதார சீர்கேடு போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.
விலைவாசி உயர்வு – வீட்டு வாடகையும் உயர்வு
இதற்கிடையில் விலைவாசி உயர்விற்கு ஏற்ப வீட்டு வாடகையை உயர்த்துகின்றனர். சிலர் 2, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகையை உயர்த்தினாலும், பலர் ஒவ்வொரு ஆண்டும் வாடகையை உயர்த்தி வசூலிப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் சென்னையின் முக்கியமான பகுதிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு 3,000 ரூபாய், 4,000 ரூபாய் அளவிற்கு வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது.
சென்னை கண்ணகி நகர் துயரம்: வீட்டின் 3 வது மாடியில் புகுந்துவிடும் மழைநீர்- இட்லி வியாபாரி வேதனை
நடப்பாண்டு வாடகை உயர்வு – ஏரியா வாரியாக
ஏரியா 2025 வாடகை 2026 வாடகை ஐயப்பன்தாங்கல் 15,893 19,342 கோயம்பேடு 18,614 22,393 மேற்கு தாம்பரம் 13,652 16,260 மேடவாக்கம் 16,138 19,124 துரைப்பாக்கம் 20,040 23,647 ராமாபுரம் 17,851 20,582 இந்நிலையில் அடுத்த 12 முதல் 24 மாதங்களில் தலைநகரின் சில முக்கிய பகுதிகளில் வாடகை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறியுள்ளன.
அடுத்த 2 ஆண்டுகளில் பெரிதாக வாடகை உயரவுள்ள பகுதிகள்
வ.எண் ஏரியா 1 கே.கே.நகர் 2 தாம்பரம் 3 மதுரவாயல் 4 அடையாறு 5 வளரசாக்கம் இந்த பகுதிகளில் 15 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை வீட்டு வாடகை உயர்வதற்கு வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். இவ்வாறு வாடகை உயர்வின் பின்னணி மூன்று பிரதான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம்: கே.கே.நகர், வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் ஆரஞ்சு மற்றும் ரெட் மெட்ரோ ரயில் சேவை அடுத்த சில ஆண்டுகளில் வரவுள்ளன. எனவே இந்த திட்டம் இறுதிகட்டத்தை எட்டும் போது வீட்டு உரிமையாளர்கள் வாடகை உயர்வு குறித்து பரிசீலித்து உடனடியாக அமல்படுத்தி விட வாய்ப்புள்ளது. அடுக்குமாடி கேட்டட் கம்யூனிட்டி வீடுகள்: ஒயிட் காலர் வேலைவாய்ப்பில் இருப்பவர்கள், பணக்காரர்கள் குடியிருப்பதற்கு கேட்டட் கம்யூனிட்டி வீடுகளை பெரிதும் விரும்புகின்றனர். அதாவது அடுக்குமாடி குடியிருப்பில் 24 மணி நேர கண்காணிப்பில் எல்லா வசதிகளும் வளாகத்திற்குள் கிடைக்கும் வகையில் எதிர்பார்க்கின்றனர். இதற்காக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பெரிய குடியிருப்புகளை கட்டி அதிக வாடகையை நிர்ணயம் செய்கின்றனர். வீட்டு உபயோகப் பொருட்கள் உடன் வாடகை வீடுகள்: மேற்கு சென்னை பகுதியில் பொதுமக்கள் வாழ்க்கை தரம் பெரிதும் மாறி வருகிறது. இவர்கள் வாடகைக்கு செல்லும் வீடுகளில் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் ஏற்கனவே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதன் அடிப்படையில் பார்க்கும் போதும் வாடகை அதிக அளவில் நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது.
Source link
