விஜய் சாரோட வேலை செஞ்ச எனக்கு தெரியாதத தியேட்டரில் மட்டும் அவரை பார்த்து மக்கள் எப்படி புரிஞ்சுக்கிட்டாங்க?: ஹெச். வினோத் – jananayagan director h vinoth is the viral star in social media

வினோத் வைரல்: உங்கள் முதல்வர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் படம் திரைக்கு வந்த அன்றே இந்தியாவில் ரூ. 41 கோடி வசூல் செய்திருக்கிறது. உலக அளவில் ரூ. 100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ. 78 கோடி வந்திருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் நல்ல ப்ரிண்ட்டில் கசிந்த படம் ரிலீஸான ஒரே நாளில் ரூ. 78 கோடி வசூலித்திருப்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

ஜனநாயகன் வசூலை விட மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது ஹெச். வினோத்தின் பேட்டிகளுக்கு தான். ரிலீஸ் நாளிலும் சரி, இன்றும் சரி வினோத் பேசிய வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிக அளவில் வருகிறது. மனுஷன் ரொம்ப தெளிவாக பேசுகிறார். அவர் பேசுவதை உற்றுக் கேட்டால் நிறைய விஷயம் புரிகிறது என சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கேட்கணும் என்ற வினோத்: நேற்று ஆயிரம் கோடி வீடியோ டிரெண்டான நிலையில் இன்று விஜய் சாரை மக்கள் புரிந்து கொண்ட வீடியோ டிரெண்டாகி வருகிறது. அதாவது முதல்வர் பற்றி ஜனநாயகன் இயக்குநர் கூறியதாவது, தேர்தலில் விஜய் சார் வெற்றி பெறுவார் என்று நான் ப்ரெடிக்ட் செய்யவில்லை. மக்கள் ஏன் விஜய் சாரை வெற்றி பெற செய்யணும்?. அவர் மீது மக்களுக்கு ஏன் அவ்வளவு நம்பிக்கை இருந்தது?. நான் ஏன் அப்படி கேட்கிறேன் என்றால், அவர்கள் நினைத்தது போன்றே தற்போது நிர்வாகத்தில் நிறைய மாற்றங்கள், பாசிட்டிவான மாற்றங்கள் வந்திருப்பதாக என்னிடம் சொல்கிறார்கள். மக்கள் எப்படி அதை கண்டுபிடித்தார்கள், அவரை நம்பினார்கள்?. சாருடன் இருந்து வேலை செய்த எனக்கு தெரியாததை தியேட்டரில் மட்டுமே பார்த்து ஒருவரை எப்படி புரிந்து கொண்டார்கள் என கேட்க விரும்புகிறேன் என்றார்.

வினோத் பற்றி சினிமா ரசிகர்கள் தெரிவித்திருப்பதாவது, அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. விஜய்யை இத்தனை ஆண்டுகளாக படத்தில் தான் பார்த்தோம். அவர் நடிப்பு மட்டும் தானே தெரியுமே தவிர நிஜத்தில் அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரியாது. எதை நம்பி விஜய்க்கு ஓட்டு போட்டீங்க மக்களே என கேட்கிறார்கள்.

சொத்துக்காரர்: இது மட்டும் அல்ல மக்கள் ரொம்ப அன்பானவர்கள் என வினோத் கூறியதும் பெரிய அளவில் ரீச்சாகியிருக்கிறது. அதாவது ஒருவர் ரூ. 1000 கோடி சொத்து வைத்திருக்கிறார். அவர் மக்கள் முன்பு மேடை ஏறி தான் ரொம்ப கஷ்டப்படுவதாக கூறுகிறார். அதை பார்த்து மக்கள் ஃபீல் செய்து அவர் பாவம் என்கிறார்கள் என்றார் வினோத். அந்த ஆயிரம் கோடி சொத்து வைத்திருப்பவர் யார், பணக்காரராக இருந்தும் கூட கஷ்டப்படுவதாக கூறியது ஏன் என்று சமூக வலைதளங்களில் பெரிய ஆராய்ச்சியே நடந்து வருகிறது.
இதற்கிடையே தமிழக முதல்வரின் படத்திற்கே இந்த பரிதாப நிலையா என்று சொல்லும் அளவுக்கு ஒரு விஷயம் நடந்திருக்கிறது. அதாவது ஏற்கனவே கசிந்த ஜனநாயகன் படம் நேற்று மீண்டும் கசிந்துவிட்டது. இந்த கசிவுக்கு ஒரு முடிவே இல்லையா விஜய் சார் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

சினிமாவில் இருந்து வந்திருப்பதால் தயாரிப்பாளர்களின் கஷ்டம் விஜய்க்கு நிச்சயம் புரியம். அதனால் இனி எந்த புதுப்படமும் ஆன்லைனில் கசியாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார் என நம்பப்படுகிறது.
Source link