எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இந்தச் சந்திப்பை மையமாக வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
முதல்வரின் விமர்சனம்
“தேர்தல் காலத்தைச் சந்திக்கவே டெல்லியின் சம்மதம் தேவை என்ற நிலையில் உள்ளோரின் கைகளில் தமிழ்நாடு சிக்கினால், ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, ஒரு மாநிலக் கட்சியின் தேர்தல் முடிவுகளுக்கே டெல்லி மேலிடத்தின் அனுமதி தேவைப்படும் நிலையில், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் உரிமைகள் முற்றிலும் பறிபோகும் என்பதை முதல்வர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
