எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ள நிலையில், இந்த பயணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு விவகாரம் குறித்து பேசியிருந்தாலும், பின்னணியில் திமுகவை சிக்க வைக்க கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
அதிமுக கூட்டணியில் என்ன சிக்கல்?
மற்றொரு விஷயமும் இதில் சுட்டிக் காட்டப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக விஜய் சேரப் போகிறார் என்றும், இதுபற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், பவன் கல்யாண் வரை பேசிக் கொண்டிருக்கின்றனர் என்றும் அடுத்தடுத்து தகவல்கள் பரவின. இந்த விஷயத்தை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை. பாஜக தரப்பில் 45 முதல் 50 சீட் வரை கேட்டு அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியான நிலையில், பிறகு பார்த்து கொள்ளலாம் என்று அதிமுக தரப்பு தட்டி கழித்ததாகவும் பேச்சு அடிபடுகிறது.
ஒவ்வொரு கட்சிக்கும் திமுக போடும் Strategy!
ஆளுங்கட்சிக்கு துணை போகும் அதிகாரிகள்
இதுதவிர பல்வேறு மாவட்டங்களில் அதிகாரிகள் ஆளும் திமுகவிற்கு சாதகமாக சில விஷயங்களை செய்து வருகின்றனர். பணப் பட்டுவாடா, இலவசங்களை பதுக்கி வைத்து சரியான நேரத்தில் விநியோகம் செய்ய உறுதுணையாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட வாரியாக வழக்கறிஞர்கள் பிரிவு புகார் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. விசாரணையை தீவிரப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். சில வழக்குகளுக்கு இடைக்கால தடை நீடிக்கிறது.
கெஜ்ரிவால் ஆட்சியை கவிழ்த்த ஊழல் வழக்கு
இந்த விஷயங்கள் அனைத்தையும் பாஜக தலைமை சைலண்டாக கவனித்து வருவதும் அதிமுக தலைமை விரும்பவில்லை. இந்த கணக்குகள் அனைத்தையும் பேசி தீர்ப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மிக முக்கியமாக டெல்லியில் ஆட்சி செய்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு 2025 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் நெருக்கடி கொடுத்தனர்.
பாஜக அமோக வெற்றி
புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அடுத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இவரும் கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சி மீது மிகப்பெரிய ஊழல் கறை படிந்தது. இது சட்டமன்றத் தேர்தலில் தோல்விக்கு வழிவகுத்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
சிக்குவார்களா திமுக அமைச்சர்கள்?
இதேபோல் தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விரைவுபடுத்தி, கைது நடவடிக்கைகள் எடுக்க பாஜக தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கின்றன. செந்தில் பாலாஜி, பொன்முடி, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் சூழலில், தேர்தல் நேர அதிரடியாக பாஜக என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
