நீட் தேர்வுக்கு எதிராக பா.ரஞ்சித் தலைமையில் போராட்டம்

இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் பங்கேற்பு 

சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னணி இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, அருண் மாதேஸ்வர்ன், பாடகர் தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர்கள் மன்சூர் அலிகான், கலையரசன், ஆண்ட்ரியா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்துக்கு மலையாள நடிகர் மம்மூட்டி ஆதரவு 

இளைஞர்களின் குரலுக்கு செவி கொடுங்கள் என கூறி, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டத்துக்கு ஆதரவாக மலையாள நடிகர் மம்மூட்டி பதிவிட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான பதவி விலக வேண்டும் எனக் கூறி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், மம்மூட்டி வெளியிட்டுள்ள பதிவில், இளைஞர்களே நம் நாட்டின் உண்மையான செல்வம் எனவும், அவர்களை பாதுகாத்து அதிகாரம் வழங்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் சூர்யா பிறந்தநாள்: சிறப்பு போஸ்டர் வெளியீடு 

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சூர்யா 47’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் ஹோம்பாலே படக்குழுவினர் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தற்காலிகமாக ‘சூர்யா 47’ என அழைக்கப்படும் திரைப்படம் ஆகியவற்றில் சூர்யா நடித்துள்ளார்.

மேலும், ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக ஹோம்பாலே நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இந்த சூழலில், சூர்யாவின் பிறந்தநாளை இந்த 3 படக்குழுவினரும் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

Source link