நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.
நாடு முழுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வினாத்தாள்களை லீக் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கும் நோக்கில், ‘வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு’ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (ஜூலை 24) ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நெருக்கடியும் அரசு நடவடிக்கையும்
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் நீட் முறைக்கேடு உள்ளிட்டவற்றிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் சமூக ஆர்வலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடையவே நீதிமன்ற உத்தர்ரவின்படி, டெல்லி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
இதனைத் தொடர்ந்து ‘காக்ரோச் ஜனதா கட்சியினர்’ மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் பல்வேறு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.இது குறித்து சம்பவம், அறிந்த பாஜக தேசிய தலைவர் நட்டா நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஷேக்வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது .
இருப்பினும் 10 நாட்களாக மேலாக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தால் மத்திய அரசுக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதற்கிடையே , நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரில் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அமளியில் ஈடுப்பட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீட் முறைக்கேட்டில் ஈடுப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.இந்த பரபரப்பான சூழலில், இன்று பிரதமர் தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி:
வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தவறு செய்வோருக்கு 10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வழக்குகளை ஆண்டுகள் கணக்கில் இழுத்தடிக்காமல், உடனுக்குடன் விசாரித்து தண்டனை வழங்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகளை உறுதி செய்யவும், இது தொடர்பான வழக்குகளைத் தாமதமின்றி விரைவாக முடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான புதிய சட்ட வரைவைக் கொண்டு வர மத்திய அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. இதனிடையே, நிர்வாக ரீதியான நடவடிக்கையாக மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தாமதிக்கக் கூடாது – பிரதமரின் உத்தரவு
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரன் ரிஜுஜு:இந்த மசோதாவைக் கொண்டு வருவதில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது என்று பிரதமர் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப மசோதாவை தாக்கல் செய்யத் தீவிரமாகத் தயாராகி வருகிறோம். நாட்டின் மக்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தான் சிக்கிக்கொள்ளும்.மாணவர்கள் மற்றும் தேர்வர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, இந்த வரைவு மசோதாவை வரும் ஜூலை 27-ஆம் தேதியே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
Source link
