பால்வாடி இயக்கத்திற்கு பவளவிழா இயக்கம் பாடம் புகட்டும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை,

அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெகவை அவர் மறைமுகமாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது;

“எங்களை பொறுத்தவரை, நாங்களை யாரையுமே சவாலாக நினைப்பதில்லை. மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே தேர்தல் களத்தில் இருக்கிறோம். பேய், பிசாசு, பூச்சாண்டிகளுக்கு பயப்படும் இயக்கம் திமுக அல்ல. உண்மையான மக்கள் சக்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னால்தான் உள்ளது. மக்கள் சக்தி யார் பின்னால் உள்ளது என்பதை வருகிற தேர்தல் நிரூபிக்கும்.

எங்கள் முன்பு அமர்ந்து பேசக்கூட தயங்கியவர்கள் எங்களிடம் சவால் விடுகின்றனர். கூவிக்கூவி அழைத்தும், அவர்களுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை. களத்திலே கண்ணுக்கெட்டிய தூரம் வரை திமுகவை எதிர்க்கின்ற சக்தி எந்த கட்சிக்கும் இல்லை. திமுக கூட்டணி வலுவானது. பால்வாடி இயக்கத்திற்கு பவளவிழா இயக்கம் பாடம் புகட்டும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

Source link