சேலம்: மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த ஆலசம்பாளையம் அருகே மோலாணி முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அதேபகுதியை சேர்ந்த ராமாயி (வயது 65) மற்றும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்று இருந்தனர்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த மூதாட்டி கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலி திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் எடப்பாடி போலீஸ் மற்றும் கோவில் நிர்வாகத்திடம் புகார் செய்தார். அதன்பேரில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link