IPL 2027 – ஹர்திக், சூர்யகுமாரை தொடர்ந்து, டிரேடிங்கில் செல்ல விரும்பும் MI அணி ஸ்டார் வீரர்? – mumbai indians team young star player want to go in ipl 2027 trading

மும்பை இந்தியன்ஸ் அணி, தற்போது பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் செய்ய முடிவு செய்துள்ளதால், கேப்டன் பதவியை வேறு ஒரு வீரருக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கேப்டன் பதவி தனக்கு வேண்டும் என சூர்யகுமார் யாதவ் கேட்ட நிலையில், கொடுக்க முடியாது எனக் கூறியதும், அவரும் டிரேடிங்கில் வெளியேறி, கேப்டன் பதவி கிடைக்கும் அணிக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கேப்டன் பதவியை திலக் வர்மாவுக்குதான் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில், பும்ராவுக்கு கொடுக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால், கடும் அதிருப்தியடைந்துள்ள திலக் வர்மா, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தை தொடர்புகொண்டு, கேப்டன் பதவியை கொடுக்கவில்லை என்றால், என்னை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அனுப்பிவிடுங்கள் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த இணையவழி மீட்டிங்கில் பேசிய திலக் வர்மா, ‘‘இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக நான் இருக்கிறேன். அடுத்து, கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அதற்குமுன், நான் ஐபிஎலில் எனது கேப்டன்ஸி திறமையை நிரூபித்தால்தான், இந்திய அணியில் கேப்டன் பதவி கிடைக்கும். இதனால், ஐபிஎல் 2027 சீசனுக்கு என்னை கேப்டனாக நியமியுங்கள். இல்லையென்றால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அனுப்பிவிடுங்கள். அங்கு சென்றால், எனக்கு நிச்சயம் கேப்டன் பதவி கிடைக்கும்’’ என திலக் வருமா தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

கடும் அதிருப்தியில், மும்பை இந்தியன்ஸ்: இந்நிலையில், திலக் வர்மா மீது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவ் வெளியாகி உள்ளது. திலக் வர்மாவின், சமீப கால ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது. குறிப்பாக, மிடில் ஓவர்களில் பேட்டிங் ஆடும் இவர், ஸ்பின்னர்களுக்கு எதிராக 108.54 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ஆடியிருக்கிறார்.

மேலும், டி20, ஐபிஎலில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 145-யை தாண்டவில்லை. மேலும், சமீப காலமாகவே ஒருசில போட்டிகளை தவிர மற்ற போட்டிகளில், சிக்ஸர்களை கூட அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இப்படி, திலக் வர்மா பார்ம் அவுட்டில் இருப்பதால்தான், அவருத்து கேப்டன் பதவியை கொடுக்காமல், பும்ராவுக்கு கொடுக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திலக் வர்மா, மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி அதிரடி காட்டினால்தான், அவர் மீது மும்பை இந்தியன்ஸுக்கு நம்பிக்கை வரும் நிலைமை இருக்கிறது.

2 வீரர்கள் டிரேடிங்: தற்போதுவரை, மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் இருவரையும்தான் டிரேடிங் செய்ய முடிவு செய்துள்ளது. ஹர்திக்கை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், தீவிரமாக பேசி வரும் நிலையில், சூர்யகுமார் யாதவை வாங்க அணிகள் தயக்கம் காட்டுகிறது. காரணம், இவருக்கு 35 வயதாகிவிட்டது. மேலும், பழையபடி நல்ல பார்மிலும் இல்லை.

இதன்காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகள், சூர்யகுமார் யாதவை வாங்க தயங்குகின்றன. குறிப்பாக, சூர்யகுமார் யாதவுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா, அங்கிரிஸ் ரகுவன்ஷி போன்றவர்களை கேட்பதால், கேட்பதால், சூர்யகுமார் யாதவை வாங்கும் முடிவில் இருந்து கேகேஆர் அணி நிர்வாகம் பின்வாங்கிவிட்டதாம்.

Source link