நாடு முழுவதும் நீர் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்டவருக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கடந்த ஜூலை 6ஆம் தேதி சமூக ஆர்வலர் சோனம் பாங் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனைத் தொடர்ந்து அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாக இந்த போராட்டத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் மாணவர்கள் போராட்டம்
சுமார் 15 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தை முற்றுகையிட மாணவர் அமைப்பினர் ஈடுபட்டனர். அதனை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் பல்வேறு மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில்,அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகளும், திமுக தொடர்ந்து மாணவர்கள் தங்களது போராட்ட, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கினர்.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
நீட் வினாத்தாள் கசிவு வழக்கு சிறப்பு நீதிமன்றம்
தொடர்ந்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை வலுப்படுத்தியதன் காரணமாக நிலைமை மோசமடைந்தது இதனைத் தொடர்ந்து பாஜக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரத் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடவும் அதுவரை ஓர் அங்குலம் கூட அந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என சௌரத் தாஸ் மற்றும் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இன்று மதியம் வரை அவகாசம் வழங்கும்படி மத்திய அமைச்சர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.இதற்கிடையே நீட் விவகார முறைக்கேட்டில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில முழுவதும் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார்.
பிரதமர் மோடி இன்ஸ்டாகிராம் அறிவுறுத்தல்
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தங்களின் இருப்பை வலுப்படுத்தவும் பொதுமக்களுடன் தொடர்பை அதிகரிக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி எத்தனை பேர் இன்ஸ்டாகிராம் தளத்தில் தீவிரமாக இயங்குகிறீர்கள்?? என்ற கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் தளத்தில் இளைஞர்களின் பங்களிப்பும் பெரும் ஈடுபாட்டையும் சுட்டி காட்டியதாக கூறப்படுகிறது.
எனவே மத்திய அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் பதிவிடுவது மட்டுமின்றி, சமகால இளைஞர்களுடன் நேரடி தொடர்பு கொள்ள ஒவ்வொரு அமைச்சரும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட வேண்டும் எனவும் அருவுருதியதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் இளம் தலைமுறையினரும் ரீல்ஸ் எனப்படும் கூறும் வீடியோக்கள் மற்றும் பிற முயற்சிகளும் மேற்கொள்ளும் படி மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே பிரதமர் மோடி நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து பேசியிருந்தார்.இது சமூகவலைத்தளத்தில் மிகுந்த கவனம் பெற்றது. மேலும் பலராலும் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து காணொளிக்கு கிடைத்த வரவேற்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். தமது நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து நேர்மறையான ஆலோசனை வழங்கியது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
