Rohit Sharma – இது நடந்தால், உடனே ஓய்வு அறிவித்துவிடுவேன்: பிசிசிஐயிடம் தெரிவித்த ரோஹித் சர்மா – rohit sharma explain to bcci about odi retirement

ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடருக்கு, இந்திய அணி முழுவீச்சில் தயாராகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தே, இந்திய அணி தயாராக ஆரம்பித்துவிட்டது.

ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர் நடைபெறும் தென்னாப்பிரிக்க காலநிலையில், இங்கிலாந்து பிட்ச், காலநிலையும் ஒரே மாதிரி இருக்கும் என்பதால், இங்கிலாந்து ஒருநாள் தொடர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக, ரோஹித் சர்மா மீது எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், ரோஹித்துக்கு மாற்றாக யாஷஸ்வி ஜெய்ஷ்வால் தயார் நிலையில், இருப்பதால், ரோஹித் சர்மா ஒவ்வொரு தொடரிலும் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் 21 பந்தில் 11 ரன், 47 பந்தில் 26 ரன் என மோசமான ரன்களை எடுத்து சொதப்பினார். குறிப்பாக, ஸ்ட்ரைக் ரேட்டுல் 50+ என்ற வகையிலேயே இருந்தது. இந்நிலையில், மூன்றாவது போட்டியில், காட்டடி அடித்து, 110 பந்துகளில் 138 ரன்களை குவித்து அசத்தினார். இருப்பினும், இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றியைப் பெறவில்லை.

ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர் நடைபெறும்போது, ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகிவிடும். மேலும், பீல்டிங் பிட்னஸும் சற்று குறைய வாய்ப்புள்ளது. இதனால், ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை இனி ரெகுலராக விளையாட வைக்கலாமா என்ற ஆலோசனையில் பிசிசிஐ இறங்கியுள்ளது.

இந்திய அணிக்கு, அடுத்து செப்டம்பர் இறுதியில்தான் ஒருநாள் தொடர் இருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்தியா வந்து விளையாட உள்ளது. இத்தொடரில், யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை களமிறக்கலாமா அல்லது ரோஹித் சர்மாவையே விளையாட வைக்கலாமா என்ற யோசனையில் பிசிசிஐ இருக்கிறது.

ரோஹித் முடிவு: இந்நிலையில், ரோஹித் சர்மாவை தொடர்புகொண்ட பிசிசிஐ சீனியர் நிர்வாகிகள், ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவு குறித்து ஓபனாக கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா, ‘‘தற்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான, கடைசி ஒருநாள் போட்டியிலும் சொதப்பியிருந்தால், ஓய்வு குறித்து யோசித்திருப்பேன். ஆனால், சிறப்பாக ஆடிவிட்டதால், என் மீது, எனக்கே முழு நம்பிக்கை வந்துவிட்டது. ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடரில் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்கு கோப்பை வென்றுகொடுப்பதுதான் எனது லட்சியம்’’ எனக் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பேசிய ரோஹித் சர்மா, ‘‘தற்போது, பிட்னஸ் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறேன். ஆகையால், எனது பிட்னஸ் மீது எந்த கவலையும் வேண்டாம். ஒருவேளை, பிட்னஸில் பிரச்சினை ஏற்படுவதுபோல் எனக்கு தெரிந்தால், உடனே ஓய்வு முடிவை உங்களிடம் தெரிவித்துவிடுவேன். ஏனென்றால், நான் உலகக் கோப்பையில் விளையாடுவதைவிட, உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம்’’ என ரோஹித் தெரிவித்தாராம்.

ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடருக்கு பிறகு, ரோஹித் சர்மா 48 போட்டிகளில் விளையாடி, 48.9 சராசரியில் 1700 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். மேலும், அவரது ஸ்ட்ரைக் ரேட், 117 என்ற வகையில் இருக்கிறது. இதனால், ரோஹித்தை புறக்கணித்தால், அது இந்திய அணிக்குதான் பாதிப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.

Source link