2020-21ஆம் ஆண்டில் 352.48 லட்சம் பேல்களாக இருந்த பருத்தி உற்பத்தி 2025-26ஆம் ஆண்டில் 290.91 பேல்களாக குறைந்துள்ளதாகவும், அதை உயர்த்த தொடர்ந் து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பருத்தி உற்பத்தி குறித்த விவரங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் பபித்ரா மார்கரிட்டா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பருத்தி உற்பத்தி மற்றும் அது சார்ந்த துறைகளின் நிலை குறித்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.
பருத்தி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!
சமீபத்திய பருத்தி பருவங்களில் நாட்டின் உற்பத்தி அளவில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. 2020-21 ஆம் ஆண்டில் 352.48 லட்சம் பேல்களாக இருந்த பருத்தி உற்பத்தி, 2025-26ஆம் ஆண்டில் தற்காலிக கணக்கீட்டின்படி 290.91 லட்சம் பேல்களாகக் குறைந்துள்ளது. விவசாயிகள் அதிக லாபம் தரக்கூடிய மாற்றுப் பயிர்களைச் பயிரிடத் தொடங்கியதால் பருத்தி சாகுபடி பரப்பளவு குறைந்ததே உற்பத்தி சரிவுக்கான முக்கியக் காரணமாகும். எனினும், இந்த காலகட்டத்தில் ஹெக்டேருக்கு 428 முதல் 451 கிலோ வரை என்ற அளவில் பருத்தி உற்பத்தித் திறன் ஸ்திரமாகவே தொடர்கிறது.
வாங்கிய கடனை அடைத்தால் வேலை முடிந்ததா? நீங்கள் கேட்டு வாங்க வேண்டிய 5 ஆவணங்கள்
பருத்தி விலை மற்றும் இறக்குமதி நிலை!
உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பருத்தியின் விலையும் அமைந்துள்ளது. சர்வதேச அளவில் பருத்தி விலை 19 சதவீதம் வரை அதிகரித்துள்ளதுடன், உள்நாட்டில் எஸ்-6 (S-6) ரக பருத்தி விலை 18 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், கச்சா பருத்தி மற்றும் பருத்தி நூலைத் தங்குதடையின்றிப் பெறவும் தேவையான இறக்குமதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறக்குமதியையும் சேர்த்து நாட்டின் ஒட்டுமொத்த பருத்தி இருப்பானது உள்நாட்டு ஜவுளித் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. அரசு பருத்தி நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அதிகரிக்கும் மக்கள் மருந்தகங்கள் – தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை தெரியுமா?
ஜவுளித் துறைக்கு மத்திய அரசின் ஆதரவு நடவடிக்கைகள்!
இந்தியாவின் ஜவுளித் துறைக்குத் தேவையான கச்சா பருத்தியை நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலாவதாக இறக்குமதி வரி விலக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜவுளித் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில், 2026 மே மாதம் 6ஆம் தேதி முதல் 2026 அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரி முழுமையாக விலக்களிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீண்ட இழைப் பருத்திக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜவுளித் துறைக்குத் தரமான பருத்தி கிடைப்பதை எளிதாக்கும் நோக்கில், கூடுதல் நீண்ட இழைப் பருத்திக்கு வழங்கப்பட்டு வரும் இறக்குமதி வரி விலக்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
நகைக் கடைக்கு போறீங்களா? ரேட் என்னனு கொஞ்சம் பார்த்துட்டு போங்க மக்களே
பருத்தி உற்பத்தித் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்தும் புதிய திட்டம்!
பருத்தியின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு 2026-27 முதல் 2030-31 ஆம் நிதியாண்டு வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு “பருத்தி உற்பத்தித் திறன் இயக்கத் திட்டம்” செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ. 5,659.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
