பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்று தனது 88 ஆவது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வாழ்த்து தெரிவித்தார். பாமகவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே அதிகார மோதல் போக்கு வெடித்தது.
இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் பிரிந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இதில் அன்புமணி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்று பாமக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. ஆனால் ராமதாஸ் சசிகலா உடன் கூட்டணி வைத்து தோல்வியை தழுவினார்.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
இந்த சூழலில் ராமதாஸின் திருமண நாளன்று தைலாபுரத்திற்கு சென்ற அன்புமணி சந்திப்பு பேசினார். அப்போது ராமதாஸ் அன்புமணியை கட்டித்தழுவி அழுதது பாமகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அப்பா மகனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்த வார்த்தை போல் முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து பாமக அரசியல் அடுத்த கட்ட நகர்வுகளில் அன்புமணி ராமதாஸ் ஈடுபட தொடங்கினார்.
மேலும் அன்புமணி மீது தொடரப்பட்ட வழக்குகளை ராமதாஸ் வாபஸ் பெற்றார். இந்த நிலையில் ராமதாஸ் தனது 88-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை ராமதாஸ் மற்றும் அன்புமணி கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய ராமதாஸ் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இனி நான் அரசியல் பேச மாட்டேன் அரசியல் எந்த கருத்துக்களையும் யாரும் என்னை வந்து சந்திக்க வேண்டாம். அரசியல் பற்றி பேசுபவர்கள் என்னை தவிர்க்க வேண்டும் அரசியலில் இருந்து துறவறம் மேற்கொள்ள உள்ளேன் மேலும் பாமக மற்றும் அரசியலை இனி அன்புமணி ராமதாஸ் தான் பார்த்துக் கொள்வார் என்று கூறினார்.
