வேத ஜோதிடத்தில் கர்மவினைகளை அருளக்கூடிய கிரகமாக சனி கிரகத்தை குறிப்பிடப்படுகின்றது. மீன ராசியில் தற்பொழுது சஞ்சரிக்கும் சனி கிரகம், 2027 ஜூன் 3ஆம் தேதி மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். மேலும் அங்கு அவர் பலவீனமான அமைப்பான நிச நிலையை அடைய உள்ளார்..சனியன் இந்த பலவீனமான அமைப்பானது சில ராசிகளின் வாழ்க்கையில் நிதி நிலையில் முன்னேற்றம், தொழிலில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் தரக்கூடியதாக இருக்கும். மேஷ ராசியில் சனியின் சஞ்சாரத்தால் எந்த ராசிகளுக்கு மிகவும் மங்களகரமான பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.
நவகிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய மற்றும் ஒரு ராசியில் இருந்து மற்றொருதாக இருக்க பெயர்ச்சியாக இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளக்கூடிய சனி கிரகம், 12 ராசிகளை சுற்றி வரும் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். கர்ம வினைகளை தரக்கூடிய சனி பகவான் தற்பொழுது மீன ராசியில் வக்ர நிலையில் சஞ்சாரம் செய்து வருகின்றார். மேலும் 2027 ஜூன் 3ம் தேதி மேஷ ராசியில் அமையும் போது அவர் பலவீனமான நீச நிலை அடைவார். சனியின் இந்த நிலை காரணமாக மிதுனம், சிம்மம், தனுசு உள்ளிட்ட 5 ராசிகளுக்கு மிகவும் மங்களகரமான பலனை தரக்கூடியவராக அமைவார். இந்த காலகட்டத்தில் அவர்களின் நிதிநிலை பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களுக்கு சனி பகவானின் மேஷ ராசி சஞ்சாரம் சாதகமான பலன்களை தரக்கூடியதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய வருமான ஆதாயங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எதிர்ப்பாராத இடங்களில் இருந்து உங்களுக்கு நிதி ஆதாரங்கள் கிடைக்க பெறலாம். மேலும் நீண்ட காலத்திற்கு முன்பு நீங்கள் செய்த முதலீடுகள் வருமானத்தை தரும்.
புதிதாக சொத்து வாங்குவது, பங்கு சந்தை, பிற முதலீடுகளின் மூலம் லாபத்தை நீங்கள் பெறுவீர்கள். நேரத்தில் இருப்பவர்களுக்கு இந்த கோச்சார நிலையானது உங்கள் வேலை தொடர்பான அங்கீகாரத்தையும், முன்னேற்றத்தையும் தரும்.
மிதுன ராசி
தொழில் வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு பதிலளிக்கும் புதிய முயற்சிகள் நல்ல வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் தரும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.
இந்த காலகட்டத்தில் தொழில் முனைவோருக்கு சாதகமான காலமாக அமையும். ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும், புதிய நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும், புதிய செய்ய வாய்ப்புகள் உண்டு, சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உயர்கல்வி, வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலனைத் தரும்.
சிம்ம ராசி
சிம்ம ராசி அன்பர்களுக்கு மேஷ ராசியில் சனியின் சஞ்சாரம் அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பாக இருக்கும். ஆண்டுகளாக உங்களுக்கு . தேங்கி கிடந்த பணிகள் நிறைவடையாக வாய்ப்பு உண்டு. நிதிநிலை ரீதியாக வளர்ச்சி காணக்கூடியதாக இருக்கும். நீண்ட காலமாக தேங்கி கிடந்த வேலை மற்றும் பணம் திரும்ப கிடைக்கலாம். கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் லாபத்தை பிரிவீர்கள். இது புதிய முதலீடு செய்வதற்கான ஆர்வத்தையும் ஏற்படுத்தும். எதிர்பாராத வழிகளில் பணமும் நண்பர்களும் கிடைப்பார்கள்.
வேலையில் முன்னேற்றம் உண்டு, கடின உழைப்பிற்கான வங்கிகாரம், பாராட்டும் கிடைக்கும். தொழில் முனைவோர்களுக்கு சாதகமான காலமாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுடைய வருமானத்தை, முதலீட்டை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இந்த காலத்தில் நீங்கள் வீடு, நிலம், வாகனம் வாங்குவதற்கான திட்டங்கள் நனவாக வாய்ப்புகள் உண்டு. குடும்பச் சொல்லில் மகிழ்ச்சியாக இருக்கும். முடிவுகள் நல்ல பலனை தரும்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களுக்கு மேஷ ராசியில் சனி சஞ்சரிக்க கூடிய இந்த காலத்தில் நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம், வேலை தொடர்பாக நல்ல வளர்ச்சியை மாற்றங்களையும் காண்பீர்கள். உங்களுடைய நிதிநிலை வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, திறமைக்கான புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம். பணியிடத்தில் உங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். முக்கியமான திட்டங்கள் எதிர்பார்த்த வெற்றி அடையவும்.
நிதிநிலை ரீதியாக சாதகமாக இருக்கும் என்பதால் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய வேலையில் முன்னேற்றம், தொழிலை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் என பல விதத்தில் சாதகமான பலனையும் சூழலையும் அனுபவிப்பீர்கள். அரசு பணி மற்றும் அரசு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள்.
கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க கூடியதாக இருக்கும். உங்களுடைய முடிவு எடுக்கும் திறன் வலுவடையும். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களுடைய சிறப்பான செயல்பாடு மற்றும் ஆலோசனை வரவேற்கப்படும். வேலை மற்றும் தொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்புகள் தேவை பிறக்கும். எந்த துறையில் நீங்கள் செயல்பட்டாலும் அதில் சாதகமான சூழல் இருக்கும். உங்களுடைய முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்களை தரக்கூடியதாக அமையும். புதிய வாடிக்கையாளர்களை பெறுவீர்கள்.
கும்ப ராசி
நிதி ரீதியாக உங்களுக்கு கிடைக்கக்கூடிய லாபத்தால் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள். சேமிப்பை அதிகரிக்கவும் மற்றும் முதலீடு தொடர்பான சிந்தித்து செயல்படுவது நல்லது. இந்த காலத்தில் செய்த முதலீடுகள் லாபத்தை தரும். உங்கள் செயல்பாடுகளால் பணியிடத்திலும் குடும்பத்திலும் பாராட்டை, மதிப்பை பெறுவீர்கள். அனைத்து விதமான முயற்சிகளும் நல்ல பலனை தரும் அதனால் முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டிய காலமாக இருக்கும்.
குறிப்பு:
இங்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஜோதிடத் தகவல்களும் தீர்வுகளும் ஜோதிடம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இது தொடர்பாக எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. இத்தகவல்களைக் கருத்தில் கொண்டு முழுமையான விவரங்களைப் பெற, தொடர்புடைய நிபுணரை அணுகுவது நல்லது.
