தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் முதலில் பாடப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், திமுகவுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அரசியல் வட்டாரத்தில் இச்சம்பவம் மிகப்பெரிய அளவில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், பட்டமளிப்பு விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழட்டு மூன்றாவதாக பாடப்படும் என துணை வேந்தர் அறிவித்துள்ளது கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக 33 வது பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்படும். தொடர்ந்து இரண்டாவதாக தேசிய கீதம், மூன்றாவதாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என துணை வேந்தர் சந்திர சேகர் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை இந்த அறிவுரைய வழங்கி இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார். அதோடு இந்த நடைமுறையை பின்பற்றவில்லை என்றால், நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. தொடர்ந்து பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடமா? என பலரும் கடுமையாக கேள்விகளை முன்வைத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திமுகவை சார்ந்த முன்னாள் சபாநாயகர் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது,நெல்லை மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், அதனை தொடர்ந்து தேசிய கீதம், கடைசியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும். மீறினால் துணை வேந்தர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை வேந்தருக்கு ஆளுநர் மாளிகை பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நெல்லை மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக 33-வது பட்டமளிப்பு விழாவில், முதலில் வந்தே மாதரம், தொடர்ந்து தேசிய கீதம், இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும், மீறினால் துணைவேந்தர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை துணை வேந்தருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் விவகாரத்தில் பிரதமர் மோடியிடம் வழிகாட்டுதல் தாருங்கள் என்று கெஞ்சிக் கேட்டு பெற்ற நடைமுறை இதுதானா சிஎம் சார் என்ற கேள்வியை முன்வைத்துள்ளார் அப்பாவு.
ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி 2025 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாட்டை கூட்டினார். அப்போது அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரமும், அவர்களை கூட்டும் அதிகாரமும் மாநில அரசுக்கு மட்டும் தான் உண்டு என்பதை சுட்டிக் காட்டினார்கள். தமிழ்நாட்டில் உள்ள 32 பல்கலைக்கழக துணை வேந்தர்களையும் அந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ள விடாமல் செய்தவர் வீரமிக்க தேசிய தலைவர் மு.க. ஸ்டாலின்.
அவர்களுக்கு இருந்த அதே வீரம், தைரியம், தில்லு, ஆவேசம், வாய் சவாடல் எல்லாம் தங்களுக்கு சினிமாவில் மட்டும் தானா சிஎம் சார்? உலகிற்கு தமிழ்த்தாய் வாழ்த்தை தந்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே அதனை மூன்றாம் தர வாழ்த்தாக ஆளுநர் மாற்ற முயற்சிக்கிறார்கள். அவருக்கு துணை போகும் முதல்வரே, தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா? அல்லது ஆர்எஸ்எஸ் ஆட்சியா? என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதோடு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சிறு பங்கம் ஏற்பட்டாலும் தன்னெழுச்சியுடன் மாணவர்கள் பொங்கி எழுந்து, தமிழ்த்தாய் வாழ்த்தை அரங்கத்திலேயே முதலில் பாடுவார்கள். வெற்றி கொடி நாட்டுவார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது தான் பட வேண்டுமென நிர்பந்தம் செய்தால் விளைவு விபரீதமாக இருக்கும் சிம் சார் என கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார் அப்பாவு.
