முதல்வருக்கு எதிராக திசை திருப்ப முயற்சி: எச்சரிக்கை விடுத்த தவெக அமைச்சர் ரமேஷ் – tvk minister ramesh comments on protest against the neet exam

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் பெரியளவில் வெடித்த வண்ணம் உள்ளன. இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்கும் நிலையில், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். இதனிடையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக காவல்துறை அடக்குமுறையை கையாண்டு வருவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தவெக அமைச்சர் ரமேஷ் நீட் தேர்வு போராட்டம் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதாவது டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை தொடர்ந்து, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல இடங்களிலும் போராட்டங்கள் வெடித்தது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் என பல பகுதிகளிலும் மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையில் நீட் தேர்வுக்கு எதிராக போராடும் SFI, DYFI அமைப்பை சார்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கையாண்டு வருகிறது. அவர்களின் கைது செய்து கொண்டிருக்கிறது. எனவே காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர், அவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி கொண்டிருக்கின்றனர். அதோடு நீட் எதிர்ப்பு போராட்டம் குறித்து விஜய் கருத்து எதுவும் தெரிவிக்காததை, போராட்டக்காரர்கள் கடுமையாக விம்ர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நீட் தேர்வு போராட்டம் குறித்து தவெக அமைச்சர் ரமேஷ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நீட் தேர்வு போராட்டத்திற்கு முதல்வர் எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளதே என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு தன்னுடைய இணையத்தளத்தில் ராகுல் காந்தி கைது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நிலைப்பாட்டினை சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே நாங்கள் நீட் தேர்வினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். அது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் எனவும் நிலைப்பாட்டினை சொல்லி இருக்கிறோம் என்றார். தொடர்ந்து அவரிடம் தமிழ்நாட்டில் ஃபேன் நீட்டுக்காக போராடுவது சம்பந்தமாக கேட்கப்பட்டது. அதற்கு நீட் தேவை கிடையாது என முதல்வர் தெளிவாக சொல்லி விட்டார். அதையும் தாண்டி தமிழ்நாட்டில் மாணவர்களுடைய நோக்கத்தை, போராட்டத்தினை மதிக்கிறோம்.

அதே நேரம் சிலர் இதில் புகுந்து முதல்வருக்கு எதிராக திரும்பனும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டார்கள் என்றால், அதனை அரசாங்கம் எப்படி அணுக வேண்டுமோ, அப்படி அணுகுவோம் என எச்சரிக்கை விடுக்கும் படியாக பேசியுள்ளார் அமைச்சர் ரமேஷ். அவருடைய இந்த பேச்சு குறித்து பலவிதமான கருத்துக்கள் எழுந்துள்ளது. அந்த வகையில் நாதக இடும்பாவனம் கார்த்திக், ரமேஷின் பேச்சினை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், முதல்வருக்கு எதிராகத் திருப்பினால் அரசு எப்படி கையாளுமோ அப்படி கையாளும் என்றால், இது வெளிப்படையான மிரட்டல்தானே என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு என்ன செய்வீங்க. மிஞ்சி மிஞ்சி போனால் கைது செய்வீர்கள். ஆடுங்க. எவ்வளவு முடியுமோ ஆடுங்கள். அரசும் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ளும் என கடும் விமர்சனங்களை இடும்பாவனம் கார்த்திக் தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link