நம்ம சுயசரிதையை படமாக்கினால் என்னனு நண்பர்களிடம் கேட்ட ரஜினி? – superstar rajinikanth plans to make a movie based on autobiography: reports

படம் பண்ணலாமா?: ரஜினிகாந்த் தன் வாழ்க்கையை ஒரு புத்தகமாக எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறி பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் அவரின் சுயசரிதை வந்தால் அதை உடனே வாங்கி படித்துவிட வேண்டும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் சுயசரிதையோ விற்பனையில் புது சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் புது தகவல் வெளியாகி தலைவர் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதாவது சுயசரிதையை படமாக எடுக்கலாமா என்கிற யோசனையில் இருக்கிறாராம் ரஜினிகாந்த். இது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டிருக்கிறாராம்.

தர்மன் ஷூட்டிங்: தலைவர் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் மெகா பிளாக்பஸ்டர் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள் ரசிகர்கள். ரஜினிகாந்த் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் நடித்து வருகிறார். விண்வெளி நாயகன் கமல் ஹாசன் தயாரித்து வரும் அந்த படத்தின் இயக்குநர் மூன்று முறை மாறிவிட்டார்கள். மூன்றாவதாக வந்த அஸ்வத் தான் படப்பிடிப்பை துவங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்.

முன்னதாக தலைவர் 173 என அழைக்கப்பட்ட அந்த படத்தை இயக்க சுந்தர் சி.யை தேர்வு செய்தார்கள். பிரஷர் முடியல என்று அவர் விலகிவிடவே சிபி சக்ரவர்த்தி வந்தார். ரஜினிக்கு வில்லனாக இயக்குநர் ஷங்கரை நடிக்க வைக்கிறாராம்யா இந்த சிபி என்று பேசப்பட்டது. ஆனால் சிபிக்கு பதில் அஸ்வத் வந்துவிட்டார்.

தம்மு மிஸ்ஸிங்: தர்மனுக்கு முன்பு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. ஜெயிலர் படம் எப்படி வெற்றி பெற்றதோ அதே மாதிரி ஜெயிலர் 2 படமும் ஹிட் தான் என்று நம்பப்படுகிறது. ஜெயிலர் படத்திற்கு பெரிய ஹைலைட்டாக இருந்ததே தமன்னா டான்ஸ் ஆடிய காவாலா பாட்டு தான். இரண்டாம் பாகத்தில் தம்மு இல்லையே என்று ரசிகர்கள் ஃபீல் செய்கிறார்கள்.

நெல்சன், கமல், ரஜினி: தர்மன் படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் நெல்சன் இயக்கத்தில் அதாவது மூன்றாவது முறையாக அவர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.KHxRK என அழைக்கப்படும் அந்த படத்தில் ரஜினியுடன் அவரின் நண்பர் கமல் ஹாசனும் நடிக்கிறார். ப்ரொமோவில் தன் பட ஹீரோ ரஜினியா, கமலா என்பதை சொல்லாமல் முடித்துவிட்டார் நெல்சன். ஹீரோ யாரென்று நாம் கேட்பதற்கு முன்பு ரஜினியும், கமலுமே நெல்சனிடம் கேட்க ஆத்தி இது என்ன வம்பா போச்சு என்பது மாதிரி விழிக்க மட்டும் செய்தார் நெல்சன் திலீப்குமார்.
தலைவர் இருக்கும்போது அது எப்படி கமல் பெயரை முதலில் போடலாம் என ரஜினி ரசிகர்கள் கேட்டார்கள். ஆனால் கமல் பெயரை முதலில் போடச் சொன்னதே ரஜினிகாந்த் தான் என்பது தெரிய வந்ததும் அமைதியாகிவிட்டார்கள். பல ஆண்டுகள் கழித்து இரண்டு பெரும் ஜாம்பவான்கள் சேர்ந்து நடிக்கவிருப்பதால் அந்த படத்தின் மீது தற்போதே பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

ரஜினி ஓய்வு: இதற்கிடையே தலைவர் 175 படத்துடன் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு வீட்டில் ஓய்வு எடுக்கலாம் என்கிற முடிவில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தலைவர் நடிக்கும் கடைசி படத்தை இயக்கும் அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும் என்று ரசிகர்கள் யூகிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
Source link