கள்ளச்சந்தையில் மது விற்பனையை கண்டறிய அதிரடி சோதனை

திருவண்ணாமலையில் கல்நகர் கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச் சந்தையில் விற்கப்படும் மது பாட்டில்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை கண்டறிய மோப்பநாய் பைரவா மற்றும் ட்ரோன் கேமரா பயன்படுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் குழுக்களாக பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்ட போது.

கல் நகர் பகுதியில் கடப்பா கல்லுக்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மது பாட்டில்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கலானா ஹான்ஸ் பாக்கெட்டுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மது பாட்டல் விற்பனையில் ஈடுபட்ட பெண்மணி ஒருவரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீவிர சோதனையில் ஒரு ஆண் உட்பட 3 பெண்களை போலீசார் கையும் களமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

கள்ளச் சந்தையில் மது பாட்டிலை விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் இருவர் கைது மேலும் இரண்டு பெண்கள் கைது.

Source link