மதுரை, கோவை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வருமாறு தமிழ்நாடு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் அவசியம் என அமைச்சர் சம்பத்குமார் கருத்து.
இரு பெரும் மாநகரங்களும் தொழில் நகரமாகவும், முக்கிய சுற்றுலா இடமாகவும் இருப்பதாலும், மக்கள் தொகை அடிப்படையிலும் மெட்ரோ ரயில் சேவை கோரிய தமிழ்நாடு அரசின் கோரிக்கையை, போதுமான மக்கள்தொகை இல்லை என கடந்த முறை நிராகரித்த மத்திய அரசு இம்முறை மெட்ரோவுக்கு மக்கள் தொகை மட்டுமே காரணமாக இருக்க முடியாது என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் மெட்ரோவுக்கு மாற்றாக உயர்மட்ட பாலங்கள் அமைத்து விரைவு பேருந்து சேவையை ஏற்படுத்துமாறும் மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் யோசனை வழங்கியுள்ளது.
