விஜய் கர்நாடக செல்கிறாரா? முதல் முறையாக விளக்கம் அளித்த பிரவீன் சக்கரவர்த்தி – is vijay visiting karnataka praveen chakravarty clarifies for the first time

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் எழுதிய என்ற புத்தகத்தை மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேகதாது , நீட், மாநில நிதிநிலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

விஜய் கர்நாடக செல்கிறார் என்ற தகவல் இல்லை

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடக செல்ல உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அதுபோன்ற உறுதியான தகவல் எதுவும் தன்னிடம் இல்லை என்று பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.

மேலும், தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையிலான நீர்ப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.

இது முதல் முறை அல்ல

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரும் கடந்த காலங்களில் கர்நாடக முதலமைச்சர்களை சந்தித்து காவிரி உள்ளிட்ட மாநில நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்று அவர் நினைவுபடுத்தினார்.

தற்போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சிநடைபெற்று வருவதாகவும், அதில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளதால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான பிரச்சினைகளில் தீர்வு காணும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க விடமாட்டோம்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் முழுமையாக கிடைக்காத நிலையில், மேகதாது அணைத் திட்டத்தை ஏற்க முடியாது என பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.

தவெகவில் சேர துடிக்கும் பெரும் தலைகள்! அடுத்து என்ன?

தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு தெளிவானது. “மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்” என்ற உறுதியான நிலைப்பாட்டுடன், அதே நேரத்தில் பேச்சுவார்த்தை மூலம் இரு மாநிலங்களுக்கும் ஏற்ற தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார்.

நீட் தேர்வுக்கு மீண்டும் எதிர்ப்பு

நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், வினாத்தாள் கசிவு, மாணவர் தற்கொலை போன்ற சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன என்று அவர் கூறினார்.

மத்திய அரசு தண்டனைகளை அதிகரிப்பது குறித்து பேசினாலும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் என்றும், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்தினார்.

தமிழகத்தின் நிதிநிலை குறித்தும் கருத்து

தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்து பேசிய அவர், அரசின் செலவுகளை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

கடந்த சில ஆண்டுகளில் மாநில வருவாய் வளர்ச்சிகுறைந்துள்ளதாகவும், வரி வசூல் அதிகரிக்கப்பட்டால் அரசின் நிதிநிலையை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். மேகதாது, நீட், மாநில நிதிநிலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் காங்கிரஸின் நிலைப்பாட்டை பிரவீன் சக்கரவர்த்தி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பாக, மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்ற உறுதியையும், அதே நேரத்தில் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நீடித்த தீர்வு சாத்தியம் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதனால், மேகதாது விவகாரம் மீண்டும் தமிழக அரசியல் மற்றும் நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Source link