அசாமில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளதால் 6.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.

66 பேர் பலி

இந்நிலையில், அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Source link