உதயநிதிக்கு தகுதி இருக்கா? திமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும்- அமைச்சர் CTR ஓபன் டாக்! – minister nirmal kumar criticism leader of the opposition udhayanidhi stalin needs to engage in self-introspectio

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் தகுதி இல்லாமல் இருக்கிறார் என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிடி ஆர் நிர்மல் குமார் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பேட்டியில்..,இளைஞர்கள் உடைய போராட்டம் நீட்டை சீரமைக்க வேண்டும் என போராட்டம் நடந்தது. ஒரு சிலர் நீட் வேண்டாம் என போராட்டம் நடத்துகின்றனர். இதில் திமுக தேவை இல்லாமல் செய்கின்றனர். உதயநிதிக்கு யாரோ தவறாக அட்வைஸ் செய்கின்றனர். ஜென்சி டிஎம்கே டீசர்ட் போட்டு கொண்டு 200,300 ருபாய் கொடுத்து போராட்டத்தில் உட்கார வைத்துள்ளனர்.

திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?

உதயநிதியை யாரோ தப்பாக வழி நடத்துகிறார்கள் ஜென்சி என்றால் என்னவென்று தெரியாமல் அதனை தவறாக உதயநிதி வழிநடத்துகிறார். உதயநிதிக்கு ஜென்சி என்றால் என்னவென்று சொல்லி கொடுக்க வேண்டும். திமுக 200,300 கொடுத்து அங்கு உட்கார வைத்துள்ளனர். உதயநிதி இதுபோன்ற கோமாளித்தனமான விஷயங்களை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும். உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும். உதயநிதி அப்பா ஸ்டாலின் ஆட்சியில் என்னவென்று தெரியாமல் திராவிட மடல் ஆட்சி என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அதே சந்தேகத்தில் தான் உதயநிதியும் இருக்கிறார்.

திமுகவில் யாருக்குத் தகுதி இருக்கு?

உதயநிதியின் பெண் டீம் அவரை நடுரோட்டில் விட்டு விட்டது. உதயநிதி அவர் கட்சியில் இருக்கும் அனைவரையும் அழைத்து உதயநிதிக்கு கட்சியை நடத்த தகுதி இருக்கிறதா என வாக்கு எடுத்து அவர் சுய பரிசோதனை செய்ய வேண்டும். அண்ணா ஆரம்பித்த திமுகவை கனிமொழி, உதயநிதி ஆகியோரில் யாருக்கு தகுதி இருக்கிறது என வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.ஒன்றிய,பகுதி கிளை நிர்வாகிகளை அழைத்து திமுகவை வழிநடத்த தகுதி இருக்கா என பரிசோதனை செய்ய வேண்டும்.
ஸ்டாலின் 65 வயது வரை இளைஞர் அணி தலைவராக இருந்தார். உங்கள் தகுதி என்ன என்பதை தெரிந்து கொண்டு மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். கேவலமான இந்த செயலை விட்டு விட வேண்டும். மாணவர்கள் உணர்வுபூர்வமாக போராட்டம் செய்து அவருக்கு கிடைத்த வெற்றி மத்திய அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.

நம்மளுடைய தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை நீட் தேர்வு அகற்ற வேண்டும். தமிழக முதல்வர் சார்பாக நாங்கள் இதில் உறுதியாக இருக்கிறார். இந்த போராட்டங்களில் தமிழக வெற்றிக்கழக கட்சியினர் பங்கேற்றனர். ஆனால் அதில் கட்சி கொடியோ பேனரோ எதையும் புகுத்தவில்லை.போராட்டத்திற்கு அழைக்கப்பட்டதன் பெயரில் தான் அமைச்சர் ராஜ்மோகன் நேற்று ஆறுதலாக அங்கு சென்றார். 200,300 கொடுத்து தயார் செய்யப்பட்ட திமுகவினர் சில குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தனர்.

மேகதாது அணை விவகாரம்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மகன் என திரும்ப திரும்ப கூறுவார். ஆனால் அது எடுபடவில்லை செஞ்சி டிஎம்கே என்ன ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பொதுவெளியில் கோமாளித்தனமாக செயல்பட வேண்டாம்.மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் கண்டிப்பாக முதல்வர் இதில் செயல்பட்டு ஆக்கபூர்வமான வேலையாக அனைத்தும் சரி செய்யும் வேலையாக தமிழக மக்களுக்காக முதல்வர் முடிந்த அளவு 100% முழு அர்ப்பணிப்போடு ஆய்வு செய்து வருகிறார்.
நேரடியாக பேசுவது மற்றும் சட்ட ரீதியாக போராடுவது என இரண்டு வழிகள் இருக்கிறது இது குறித்து முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.ஸ்டாலினுக்கு மேகதாது என்றால் என்ன என்று தெரியாது உதயநிதிக்கு என்னவென்று தெரியாது உங்கள் தாத்தா கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 1970 மற்றும் 92 ஆகியவற்றின்போது அவர் என்ன செய்தார் அதில் முக்கிய சரத்துகள் என்னென்ன கருணாநிதி நீக்கினார் என்பது குறித்து உதயநிதியிடம் கேட்டுப் பாருங்கள் அவருக்கு எதுவுமே தெரியாது. யாரோ கொடுக்கும் அறிக்கையை படிக்கிறார் இது குறித்த கேள்வி உதயநிதியிடம் எழுப்பி பாருங்கள்.

ராமதாஸ் மிக மூத்தவர் மக்களுக்காக நீண்ட நாள் போராட்டம் நடத்தினார் தனிப்பட்ட விஷயங்களுக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை.முதல்வர் கர்நாடகா செல்வது குறித்து முதல்வர் அலுவலகம் தான் பதில் அளிக்கும் அறிவுறுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.தமிழக வெற்றி கழகம் கட்சி கலரில் பேருந்து செயல்படுத்துவது நோக்கம் இல்லை மக்களுக்கு எது நன்மையோ அதில் செயல்பட காத்திருக்கிறோம் ஒரு நொடியில் விசில் சின்னம் உலகம் முழுவதும் சென்றடைந்தது கட்சி பெயர் கட்சி சின்னம் அவற்றை வைத்து எதுவும் நாங்கள் செய்யவில்லை.அது தேவையும் இல்லை அவசியமும் எங்களுக்கு இல்லை என்று கூறினார்.

Source link