ஹர்திக் பாண்டியா டிரேடிங் குறித்து இறுதிக் கட்ட பேச்சு வார்த்தை துவங்கியுள்ளது. சமீபத்தில், நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில், விரைவில் ஹர்திக் பாண்டியா டிரேடிங்கை முடிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தை தொடர்புகொண்ட மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஆயுஷ் மாத்ரேவை கொடுக்க முடியவில்லை என்றால், ஷிவம் துபேவுடன், டிவோல்ட் பிரேவிஸை அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கூடுதலாக 10 கோடியும் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள், ஆலோசனை நடத்திடார்கள்.
சிஎஸ்கே முடிவு என்ன? இந்நிலையில், ஹர்திக் பாண்டியா டிரேடிங்கில், கூடுதலாக 10 கோடி கொடுக்க முடியாது என சிஎஸ்கே திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஷிவம் துபே, டிவோல்ட் பிரேவிஸை அனுப்ப தயார். இருப்பினும், ஹர்திக் பாண்டியாவுடன் எங்களுக்கு மற்றொரு வீரரும் வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கேட்க உள்ளதாம்.
என்ன காரணம்? டிவோல்ட் பிரேவிஸ் சென்றுவிட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5ஆவது இடம் வெற்றிடமாக மாறிவிடும். அந்த இடத்திற்கு ஒரு தரமான வெளிநாட்டு வீரர் வேண்டும். மொயின் அலி போனப் பிறகு, வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் கிடைக்காத நிலையில், மொயின் அலி இடம் தற்போதுவரை வெற்றிடமாக இருக்கிறது.
இந்நிலையில், அந்த குறையை தற்போது போக்க, சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. அதாவது, டிவோல்ட் பிரேவிஸ், ஷிவம் துபே ஆகியோருக்கு மாற்றாக, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து வில் ஜாக்ஸையும் கேட்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸுக்கும் பிரச்சினை: மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், டிவோல்ட் பிரேவிஸை வாங்கினால், அந்த அணியின் 4 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் பெரிய குழப்பம் ஏற்படும். அதாவது, பிரேவிஸை வாங்கிவிட்டால், இவருடன் ரியான் ரிகில்டன், கர்பின் பாஷ், காசன்பர் ஆகியோரைதான் ஆட வைக்க முடியும். வில் ஜாக்ஸ், ரூதர்போர்ட் ஆகியோர் பெஞ்சில்தான் அமர்வார்கள்.
இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் கோரிக்கையை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஆகஸ்ட் 7 வரை கெடு: இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை மட்டும் பேச்சு வார்த்தை நடத்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், ஹர்திக்கிற்கு பதிலாக துபே, பிரேவிஸுடன் 10 கோடி வேண்டும் என்ற நிலைபாட்டில் இருந்து, மும்பை இந்தியன்ஸ் பின்வாங்காமல், அதனை கேட்டு பெற திட்டவட்டமான முடிவில் இருக்கிறார்களாம்.
என்ன காரணம்? ஹர்திக் பாண்டியாவுக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டுமல்ல, டெல்லி கேபிடல்ஸ் அணியும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. இப்படி, ஹர்திக் பாண்டியாவுக்கு டிமாண்ட் அதிகரித்து வரும் நிலையில்தான், சிஎஸ்கேவிடம், மும்பை இந்தியன்ஸ் கறாராக இருக்கிறது.
இருப்பினும், ஹர்திக் பாண்டியாவுக்கு, சிஎஸ்கே செல்லதான் விருப்பமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
