சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சோளிங்கர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் பயணிகள் ரெயில் பகுதிநேரமாக அரக்கோணம்-திருவண்ணாமலை இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதே போல, அரக்கோணத்தில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. காட்பாடியில் இருந்து நாளை அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
