MI, DC Trading – ஹர்திக்கிற்கு பதில், 2 தரமான வீரர்களை கொடுக்க தயார்: MI அணிக்கு டெல்லி அணி ஆஃபர் – delhi capitals want hardik pandya from mumbai indians via ipl 2027 trading

ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங், பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவை வாங்க, மூன்று அணிகள் கடும் போட்டி போட ஆரம்பித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ஹர்திக் பாண்டியாவை வாங்க கடும் போட்டி போடும் நிலையில், தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் ஆஃபர்: மும்பை இந்தியன்ஸ் அணியை தொடர்புகொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவை எங்களுக்கு டிரேடிங்கில் அனுப்புங்கள் எனக் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக அக்சர் படேல் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரை அனுப்ப தயார் என டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ஒரு இளம் இந்திய ஓபனர் தேவைப்படுகிறார். மேலும், க்ருணால் பாண்டியா சென்றப் பிறகு, மும்பை இந்தியன்ஸுக்கு தரமான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அமையவில்லை. இதனால்தான், அக்சர் படேலை டெல்லி கேபிடல்ஸ் கொடுக்க முன் வந்துள்ளது.

இப்படி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேவையான இரண்டு வீரர்களை விடுவிக்க டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் முன் வந்திருப்பதால், சிஎஸ்கேவுடன் டிரேடிங் பேச்சு வார்த்தை நடத்தியபோது, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், அதிரடி கோரிக்கையை முன் வைத்துள்ளது. அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தை தொடர்புகொண்ட மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், பாண்டியாவுக்கு மாற்றாக எங்களுக்கு ஷிவம் துபே, டிவோல்ட் பிரேவிஸ் ஆகியோர் வேண்டும் எனக் கேட்டுள்ளதாம்.

மேலும், இருவரையும் அனுப்பிவிட்டு, 10 கோடி ரூபாயும் தர வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாக கேட்டுள்ளதாம். ஆனால், சிஎஸ்கே நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, ஷிவம் துபே, பிரேவிஸ் ஆகியோரை அனுப்பிவிட்டு, ஹர்திக்குடன் வில் ஜாக்ஸை கேட்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், தனது கோரிக்கையில் உறுதியாக இருக்க முடிவு செய்துள்ளது. ஹர்திக்கை மட்டுமே அனுப்ப முடியும். மாற்றாக டிவோல்ட் பிரேவிஸ், துபே உடன் 10 கோடி ரூபாய் பணமும் வேண்டும் என்ற முடிவில் இருந்து பின் வாங்க போதவில்லை என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான பேச்சு வார்த்தையை, ஆகஸ்ட் முதல் வாரம் வரை மட்டுமே நடத்த, மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்துள்ளது. ஒருவேளை, ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள், சிஎஸ்கே நிர்வாகம் நல்ல செய்திகளை சொல்லவில்லை என்றால், அடுத்து டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, டெல்லி கேபிடல்ஸிடம் அக்சர் படேலையும், மற்றொரு தரமான வீரரையும் கேட்டுப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோரை விடுவிக்க முன் வந்தாலும், டெல்லி கேபிடல்ஸின் ஆஃபர்தான், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு பிடித்துள்ளது. இப்படி, கடைசி நேரத்தில், ஹர்திக் பாண்டியா டிரேடிங்கில், டெல்லி கேபிடல்ஸ் சம்பவம் செய்துள்ளது.

Source link