வடகொரியாவிடமிருந்து படை வீரர்களை பெறும் ரஷ்யா?
வடகொரியாவில் இருந்து சுமார் 30 ஆயிரம் படை வீரர்களை பெறுவதற்கு ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் முதலே இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், வொரோனெஸ்((Voronezh)) நகரில் வடகொரிய படைகளை இறக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஜெலன்ஸ்கி வீடியோ வெளிட்டுள்ளார். ரஷ்யா-வடகொரியாவின் கூட்டு நடவடிக்கை உக்ரைனுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆசியாவுக்கும் ஆபத்தானது என ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெர்லினில் LGBTQ பேரணிக்குள் புகுந்த கார்
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற பால் புதுமையினரின் பேரணிக்குள் கார் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில், காரை மோதி விட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
LGBTQ-வின் முக்கிய நிகழ்வான கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே ((Christopher Street Day)) பேரணியில் இசை,நடனம் என பால் புதுமையினர் கொண்டாட்டத்தில் இருந்தபோது கார் புகுந்ததில் 16 பேர் காயமடைந்தந்தாக போலீசார் தெரிவித்தனர்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்
ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். கடந்த 13 ஆம் தேதி ஏமனின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவுதி நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஜீஸான் மற்றும் யான்பு நகர்களில் உள்ள அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும கரும்புகை சூழ்ந்தது. கடந்த 13 நாள்களாக ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வந்த வான்வழித் தாக்குதல்கள் தற்காலிகமாக ஓய்ந்துள்ள நிலையில், சவூதி-ஹவுதிக்கள் இடையே வெடித்த மோதலால் மேற்காசியாவில் மற்றொரு போா்மேகம் சூழ்ந்துள்ளது.
