இந்திய மாலுமிகளுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை

கருங்கடல் பகுதியில் மிகுந்த எச்சரிக்கை அவசியம் 

கருங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களில் பணிபுரியும் இந்திய மாலுமிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரால் கருங்கடல் கடற்பகுதிகளில் சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் 5 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். எனவே, இந்திய மாலுமிகளுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, தேர்தல் அரசியல் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்திய அரசியல் நிலவரங்கள் தனது மனதுக்கு வருத்தம் அளிப்பதாகவும், தற்போதைய அரசியல் அசுத்தமடைந்து விட்டதாகவும், நேர்மையானவர்கள் பிழைக்க முடியாது எனவும் தெரிவித்தார். ஆகவே, இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என கூறினார்.

அடுத்ததாக பஞ்சாப் மாநில வினாத்தாள் கசிவு விவகாரம் 

அடுத்ததாக, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு விவகாரத்தை கையில் எடுக்கப்போவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்தார். டெல்லியில் பேட்டியளித்த அவர், தங்களது எதிர்கால வியூகத்தை விரைவில் அறிவிக்கப்போவதாக தெரிவித்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாக கூறினார்.

Source link