விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பலி எண்ணிக்கை மொத்தம் 5 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தகரக் கொட்டகையில் நடந்த கொடூரம்
செங்கமலப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தகரக் கொட்டகையில் அனுமதியின்றி சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்து தீப்பற்றி எரிந்தது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
மீட்புப் பணியும் பலி எண்ணிக்கையும்
விபத்து நடந்த இடத்தில் 5 பேர் பணியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களைத் தேடும் பணியைத் தீயணைப்புத் துறையினர் தீவிரப்படுத்தினர். மீட்புப் பணியின் போது காலையில் 2 உடல்கள் மீட்கப்பட்டன.தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், வெடிவிபத்தின் வீரியத்தால் சிதறிக்கிடந்த மற்றொருவரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் 38 வயதான ராம்பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றவர்களின் விவரங்களை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது.படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் தீவிர விசாரணை
வெடிவிபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து காவல் துறையினரும் அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கௌ 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்த 5 பேரின் புகைப்படங்கள் வெளியீடப்பட்டுள்ளது.
வெள்ளி அன்று உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டம் நயா கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படும் சம்பவம் நிகழ்ந்த நிலையில், சிவகாசியிலும் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
