தமிழகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுலா பயணிகள் வருகை தொடர்பாக மாநில அரசு முக்கிய புள்ளிவிவரத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் மட்டும் 55 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். இது வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருவாய் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பின்னர் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் 49 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2023-24ல் 243 கோடி ரூபாயாக அதிகரித்தது. நடப்பாண்டின் முதல் 5 மாதங்களை எடுத்துக் கொண்டால் 18.94 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 11.33 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
தமிழக சுற்றுலாத்துறை புள்ளிவிவரம் 2026
குறிப்பாக சேலம் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் ஜனவரி – மே 2026 காலகட்டத்தில் 55,42,598 பேர் சுற்றுலாவிற்காக வந்து சென்றுள்ளனர். இதில் 55,41,385 பேர் உள்நாட்டை சேர்ந்தவர்கள். 1,213 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து சென்றவர்கள்.
சேலத்தில் மாத வாரியாக சுற்றுலா பயணிகள் விவரம்
மாதம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மொத்தம் ஜனவரி 7,80,492 35 7,80,527 பிப்ரவரி 9,08,842 302 9,09,144 மார்ச் 9,36,078 273 9,36,351 ஏப்ரல் 11,56,391 281 11,56,672 மே 17,59,582 322 17,59,904 மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கும் நிலையில், நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் சேலம் மாவட்டத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் 15வது இடத்தை பிடித்துள்ளது.
டாப் 10 தமிழக சுற்றுலா மாவட்டங்கள்
தர வரிசை மாவட்டம் சுற்றுலா பயணிகள் வருகை 1 திருச்சி 16,489,399 2 கோவை 14,620,847 3 ராமநாதபுரம் 11,939,675 4 மதுரை 10,101,040 5 தூத்துக்குடி 10,097,115 6 நீலகிரி 8,876,055 7 செங்கல்பட்டு 8,565,002 8 தஞ்சாவூர் 8,298,114 9 விருதுநகர் 8,014,205 10 சென்னை 8,001,927 இதையடுத்து திண்டுக்கல், திருவண்ணாமலை, திருவள்ளூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நடப்பு ஜனவரி – மே மாத இடைவெளியில் சுற்றுலா பயணிகள் வருகை அடிப்படையில் கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, அரியலூர், திருப்பத்தூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சேலம் மாவட்ட சுற்றுலா ஸ்பெஷல்
சேலத்தை பொறுத்தவரை பேருந்து, ரயில், விமானம் என மூன்று வழிகளில் சென்றடையலாம். மத்திய பேருந்து நிலையம், டவுன் பேருந்து நிலையம், கமலாபுரம் விமான நிலையம், சேலம் ஜங்ஷன், சேலம் டவுன், சேலம் மார்க்கெட் ஆகிய ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாநகரில் கோட்டை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த சங்ககிரி கோட்டை சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
ஏற்காடு முதல் மேட்டூர் அணை வரை
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. சேலத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் சாலை மார்க்கமாக மலை மீது ஏறி செல்லும் வகையில் வழித்தடம் அமைந்துள்ளது. இதையடுத்து காவிரி அணை சேமித்து வைத்து டெல்டா மாவட்டங்களின் உயிர் நாடியாக திகழும் மேட்டூர் அணை சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக காணப்படுகிறது. குரும்பாபட்டி விலங்கியல் பூங்கா சீரமைக்கப்பட்டு பெரிதும் கவரக்கூடிய இடமாக காட்சி அளிக்கிறது.
Source link
