அமளிக்கு இடையே பொதுத் தேர்வுகள் சட்ட திருத்த மசோதா தாக்கல்

மக்களவையில் கடும் அமளிக்கு இடையே, பொது தேர்வுகள் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில்…நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 6ஆம் நாளான இன்று ஜூலை 27ஆம் தேதி, வழக்கம்போல் காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அவை நடவடிக்கை தொடங்கியவுடன் நீட் விவகாரம் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் இருக்கைக்கு திரும்பி, விவாதங்களில் பங்கேற்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார்.

மக்களவை ஒத்திவைப்பு ஆனாலும், மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை 12 மணிக்கு கூடியதும், எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. கடும் அமளிக்கு மத்தியில் பொதுத் தேர்வு – முறைகேடுகளை தடுத்தல், திருத்த மசோதா 2026ஐ, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்தார். தொடர்ந்து அமளி நிலவியதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடாமல் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தி உள்ளார்.

வினாத்தாள் கசிவு மசோதாவின் அம்சங்கள்…நீட் வினாத்​தாள் கசிவு விவகாரம் தொடர்​பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழு​வதும் பல்​வேறு போராட்​டங்​கள் நடை​பெற்​றன. இதைத் தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி பிரதமர் மோடி தலை​மை​யில் நடை​பெற்ற அமைச்​சர​வைக் கூட்டத்​தில், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோ​தாவுக்கு ஒப்புதல் தரப்பட்டது. தற்​போது வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​கள், பொதுத்​தேர்​வு​கள் முறை​கேடு​களை தடுத்​தல் சட்​டம் 2024ன் கீழ் விசா​ரிக்​கப்​படு​கின்​றன. இதில் முக்​கிய திருத்தங்கள் செய்​யப்​பட்டு புதிய மசோதா வரையறுக்​கப்​பட்டு உள்​ளது.

10 ஆண்டுகள் சிறை, ரூ.10 கோடி அபராதம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மசோ​தா​வின்​படி வினாத்​தாள் கசிவு குற்​ற​வாளி​களுக்கு குறைந்​த​பட்​சம் 5 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​படும்குழு​வாக, கும்​பலாக முறை​கேட்​டில் ஈடு​படு​வோருக்கு 10 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை​யும் 10 கோடி ரூபாய் வரை அபராத​மும் விதிக்​கப்​படும். முறை​கேடு​களில் ஈடு​படும் தேர்​வர்​கள் அடுத்த 8 ஆண்​டு​கள் எந்​த ஒரு பொதுத்​தேர்​வை​யும் எழுத முடி​யாது.வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​களை விசா​ரிக்க சிறப்பு அதிரடிப் படை எஸ்​டிஎப் நியமிக்​கப்​பட்டு, குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட 3 மாதங்​களுக்​குள் விசாரணையை முடிக்க வேண்​டும்இவ்வாறு புதிய மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

              

Source link