CSK – டிவோல்ட் பிரேவிஸுக்கு மாற்றாக, 3 வீரர்களை டார்கெட் செய்துள்ள சிஎஸ்கே நிர்வாகம்: விபரம் இதோ – chennai super kings targets 3 players to replace dewald brevis

ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில், மும்பை இந்தியன்ஸில் இருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்க, சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஹர்திக் வேண்டும் என்றால், எங்களுக்கு டிவோல்ட் பிரேவிஸ் வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் கோரிக்கை வைத்துள்ளது.

அதாவது, சிஎஸ்கேவில் இருந்து ஷிவம் துபே, டிவோல்ட் பிரேவிஸ் ஆகியோரை விடுவித்தால்தான், மாற்றாக ஹர்திக் பாண்டியாவை கொடுக்க முடியும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், திட்டமாக தெரிவித்துவிட்டதாம்.

இதனால், பிரேவிஸை டிரேடிங் செய்தால், அவரது இடத்தை நிரப்ப, யாரை வாங்கினால் சரியாக இருக்கும் என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசிக்க துவங்கிவிட்டது.

3 வீரர்கள் தேர்வு: இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், பிரேவிஸுக்கு மாற்றாக 3 வீரர்களை டார்கெட் செய்துள்ளதாக, தற்போது தகவல் வெளியாகி உள்ளது. டிரேடிங்கில், டெல்லி கேபிடல்ஸிடம் இருந்து அசுதோஷ் சர்மா அல்லது ராஜஸ்தான் ராயல்ஸிடம் இருந்து டெனோவன் பெர்ரிரா ஆகியோரில் ஒருவரை வாங்க முடிவு செய்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், அசுதோஷ் சர்மாவை, சாதாரணமாக விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை. இதற்குமுன், அசுதோஷை வாங்க சிஎஸ்கே முயன்றபோது, மாற்றாக உர்வில் படேலை கேட்டனர். இதனால், டெல்லி கேபிடல்ஸுடன் பேச்சு வார்த்தையை சிஎஸ்கே நிறுத்தியது. இந்நிலையில், மீண்டும் அசுதோஷ் சர்மாவை வாங்க பேச்சு வார்த்தையை துவங்க முடிவு செய்துள்ளனர்.

ஒருவேளை, அசுதோஷ் சர்மாவை வாங்க முடியவில்லை என்றால், ராஜஸ்தான் ராயல்ஸிடம் இருந்து டெனோவன பெர்ரிராவை வாங்க முடிவு செய்துள்ளனர். மிடில் வரிசையில், தொடர்ச்சியாக 160+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடக் கூடியவராக பெர்ரிரா இருக்கிறார். சிஎஸ்கே கடந்த சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸிடம் டிரேடிங் பேச்சு வார்த்தயை நடத்தி சஞ்சு சாம்சனை பெற்றுக் கொண்டு மாற்றாக ஜடேஜா, சாம் கரணை விடுவித்தது. இந்நிலையில், தற்போது பெர்ரிராவை வாங்க, ராஜஸ்தான் ராயல்ஸுடம் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை, டிரேடிங்கில் இந்த இரண்டு வீரர்களையும் வாங்க முடியவில்லை என்றால், ஏலத்தில் இங்கிலாந்து பேட்டர் ஹேரி ப்ரூக்கை வாங்க முடிவு செய்துள்ளனர். ஐபிஎலில் பங்கேற்க 2 வருடங்கள் தடை விதிக்கப்பட்டதால், ப்ரூக்கால் 2025, 2026 சீசனில் பங்கேற்க முடியவில்லை. 2025 ஏலத்தில், டெல்லி கேபிடல்ஸ் இவரை வாங்கிய நிலையில், குறைந்த தொகைக்கு வாங்கப்பட்டதால் விலகினார். இதனால்தான், இவருக்கு 2 வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அந்த தடை தற்போது முடிந்துவிட்டதால், ஐபிஎல் 2027 சீசனுக்கான ஏலத்தில் பங்கேற்க உள்ளார். காட்டடி பேட்டர் என்பதால், இவரை வாங்க பல அணிகள் கடும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சிஎஸ்கே நிர்வாகம் கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் ஆகியோரை விடுவித்தாலே 28 கோடிக்கு மேல் பணம் கிடைக்கும். இதனை வைத்து, ப்ரூக்கை சுலபமாக வாங்க முடியும்.

இப்படி, பிரேவிஸுக்கு மாற்றாக மூன்று வீரர்களை தற்போதே, சிஎஸ்கே டார்கெட் செய்து வைத்துள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக துபே, பிரேவிஸ் இருவருடன் சேர்த்து, 10 கோடி ரூபாயும் வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் கேட்டுள்ள நிலையில், 10 கோடியை தர முடியாது என்ற முடிவில் சிஎஸ்கே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link