தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் தனுஷ், தற்போது முழுமையாக அரசியல் களம் புக உள்ளதாக வெளியாகி இருக்கும் பரபரப்புத் தகவல் கோலிவுட் தாண்டி தமிழக அரசியல் வட்டாரங்களிலும் விவாதங்களை கிளப்பியுள்ளது. தனது நெருங்கிய நண்பர்களிடம் இதுகுறித்து அவர் ஆலோசித்து விட்டதாகவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அவரது நற்பணி மன்றம் நேரடியாகக் களம் காணப் போவதாகவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
நெருங்கிய நண்பர்களுடன் தனுஷ் ரகசிய ஆலோசனையா?
சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவல்களின்படி, தனுஷ் தனது திரைப்பயணத்திற்கு அப்பாற்பட்டு தீவிர அரசியலில் தடம் பதிப்பதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காகத் தனது மிக நெருக்கமான நண்பர்கள், முக்கிய ஆலோசகர்கள் மற்றும் நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகிகளிடம் அவர் ரகசியமாகப் பேசி, அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீவிரமாக ஆலோசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே திரையுலகில் இருந்து நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தனுஷின் இந்த திடீர் மூவ் ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் உற்று நோக்க வைத்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலே தனுஷின் முதல் சோதனைக் களமா?
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை தனுஷ் தனது அரசியல் பலத்தை நிரூபிப்பதற்கான முதல் சோதனைக் களமாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகவோ அல்லது மக்கள் இயக்கப் பாணியிலோ களம் இறக்க முடிவு செய்துள்ளார்.வார்டு கவுன்சிலர் அல்லது ஊராட்சித் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட ரசிகர்களுக்கு மறைமுகமாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சில முக்கிய மாவட்டங்களில் தனுஷே நேரடியாக வியூகங்களை வகுத்து, வேட்பாளர்களை நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.
தனுஷ் அரசியல் வதந்திக்கு அடித்தளமிட்ட திருவள்ளூர் உரை
திடீரென தனுஷின் அரசியல் வருகை இவ்வளவு தீவிரமாகப் பேசப்பட அவரது அகில இந்திய தனுஷ் நற்பணி மன்றத்தின் அண்மைக்கால நகர்வுகள் தான் முக்கியக் காரணம். திருவள்ளூரில் நடந்த பிரம்மாண்ட ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட விழாவில் பேசிய தனுஷ், “நமது ஒற்றுமைக்கு மிகப்பெரிய சக்தி உள்ளது. அதனை வெறும் ஆடியோ லான்ச் மற்றும் புகைப்படங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், உங்கள் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் தேவைகளை அறிந்து நற்பணிகளில் தீவிரமாக ஈடுபடுங்கள்” என்று பேசினார்.
விஜய்யுடன் ஒப்பீடு செய்யும் நெட்டிசன்கள்
தனுஷின் இந்த பேச்சு, நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்தில் கையாண்ட அதே அமைதியான பாணியை நினைவூட்டுவதாகப் பலராலும் விவாதிக்கப்படுகிறது.
உண்மை நிலை என்ன?
தனுஷ் ரசிகர்களிடையே இந்த செய்தி பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இதன் பின்னணியில் உள்ள அதிகாரப்பூர்வ நிஜம் முற்றிலும் வேறாக உள்ளது. தனுஷ் தரப்பிலிருந்தோ அல்லது அவரது அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் தரப்பிலிருந்தோ அரசியல் கட்சி அல்லது தேர்தல் போட்டி குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் தனுஷின் அரசியல் பயணம் செய்திகள் கிசுகிசுத்து வருகின்றன.
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவு என்பது புதியதல்ல என்றாலும், தனுஷின் தற்போதைய நற்பணி மன்ற நகர்வுகள் அவரது எதிர்கால அரசியல் ஆசையை சூசகமாக வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், தற்போதைக்கு சமூக வலைத்தளங்களில் பரவி வரும் உடனடி உள்ளாட்சித் தேர்தல் போட்டி மற்றும் முழு அரசியல் எண்ட்ரி செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளா அல்லது உண்மையா என்பது விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
