கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான ஆணையை சமீபத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வழங்கியிருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அரசுப் பணி ஆணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தமிழக அரசியலில் தீராத வலியை ஏற்படுத்தி சென்றுள்ளது. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கு முடிவு செய்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, கடந்த 11ஆம் தேதி கரூருக்கு நேரில் சென்று பணி ஆணை வழங்கினார். இதற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் அரசு பணி ஆணையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் திறன் வளர் பயிற்சி வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவலாமே? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Source link
