சமீபத்தில் தவெக அமைச்சர் நிர்மல் குமார் , உதயநிதி ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசினார். திமுகவை வழிநடத்துவதற்கு உதயநிதிக்கு தகுதி உள்ளதா? கனிமொழிக்கு தகுதி உள்ளதா என்று அவருடைய கட்சியினரிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்த சொல்வோம். அவருடைய கட்சியினருக்கு உதயநிதி தகுதி தெரியும் என பேசியிருந்தார். இந்நிலையில் நிர்மல் குமாரின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்து காட்டமான பதிலடி ஒன்று வந்துள்ளது.
அதாவது திமுக செய்தி தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், துணிக்கடையில் இருக்கும் கட்சி வேட்டிகளை விடவும் அதிக எண்ணிக்கையில் பல கட்சி வேட்டிகள் சிடிஆர் நிர்மல் குமார் வீட்டில் இருக்கும். இதுதான் தகுதியா? அவர் பரப்பிய வதந்திகள், மாறிய கட்சி எத்தனை என்று சென்செக்ஸ் எடுக்கலாம். இதெல்லாம் தான் தகுதியா. நிர்மல் குமார் கட்டுப்பாட்டில் இரண்டு துறைகள் உள்ளது. மின்சாரத்துறையில், தினமும் மின்வெட்டு என்று மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு காரணமாக மக்கள் அவதிப்படுகிறார்கள். அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு நெஞ்சுல கை வைக்கும் அளவுக்கு உள்ளது. இதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் அறிவு இல்லாத நிர்மல் குமார், எங்கள் தலைவர்களின் தகுதி குறித்து கேள்வி எழுப்புகிறார். சட்டத்துறையில் அரசு வழக்கறிஞர் பொறுப்பினை ஆடி ஆஃபர் ,மாதிரி விற்கப்பட்டு வருகிறது. அவருடைய துறையில் நடக்கும் இந்த ஊழல் குறித்து வாய் திறந்தரா?
இதையெல்லாம் கட்டுப்படுத்த முடியாத அவர், எங்களுடைய தலைவர்களின் தகுதி பற்றி பேசுவது நகைச்சுவை என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் சூர்யா கிருஷ்ணமூர்த்தி. அதோடு தவெக அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது வரும் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்தும் சாடி பேசியுள்ளார். இன்றைக்கு நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் போராடி கொண்டிருக்கிறார்கள். அதுக்குறித்து வாயே திறக்காத ஒருத்தர் இருக்கிறார் என்றார் தமிழக முதல்வர் தான். பாஜக என்ற சொல்லை பயன்படுத்த தெம்பு கிடையாது.
கோவை, மதுரைக்கு மெட்ரோ கிடையாது என்று இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அதுப்பற்றி இப்போ வரைக்கும் முதல்வர் வாயே திறக்கவில்லை என்றும் சரமாரியாக விமர்சித்துள்ளார். மேலும் முடிந்தால் பாஜகவை கண்டிக்கிறேன். எதிர்க்கிறேன் என்று ஒரேயொரு வார்த்தையை முதல்வரை சொல்ல சொல்லுங்கள். இதற்கு பெயர் தான் கோழைத்தனம். கோமாளித்தனம் என விளாசியுள்ளார் சூர்யா கிருஷ்ணமூர்த்தி. மேலும் உங்கள் தலைவர் மாதிரி பேசுவதை நிறுத்துங்கள் என்றும் நிர்மல் குமாருக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.
தொடர்ந்து, திமுகவை யார் வழி நடத்துவது என்பதெல்லாம் அந்த கட்சிக்கு தெரியும். 75 ஆண்டுக்கால கட்சி. காங்கிரஸ், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று எதிரில் இருக்கும் கட்சி மற்றும் தலைவர்கள் மட்டும் தான் மாறியுள்ளார்கள். தமிழ்நாடு அரசியலின் சென்டராக திமுக உள்ளது. நிர்மல் குமார் எத்தனை கட்சி மாறினார் என்பது குறித்து பேசுவோமா? அவர் எதற்காக இப்படியெல்லாம் பேசுகிறார் என்றால் ஒரேயொரு காரணம் தான். தவெகவில் நிர்மல் குமாருக்கு மதிப்பில்லை.
அந்த கட்சியை சார்ந்தவர்கள் யாரும் அவரை மதிக்கவில்லை. மதுரை சார்ந்த அமைச்சர் ஒரு நிகழ்ச்சிக்கு போறார். அங்க எம்எல்ஏக்கள் வரலைன்னு தெறிச்சு ஓடுறார். இப்படி சொந்த கட்சி எம்எல்ஏக்களே மடிக்காத நிலையில் தான் நிர்மல் குமார் உள்ளார். எனவே முதலில் உங்க கட்சி எம்எல்ஏக்கள் மதிக்கிற மாதிரி நடந்துகோங்க. திமுகவை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என கடுமையாக விளாசியுள்ளார் சூர்யா கிருஷ்ணமூர்த்தி.
