பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு அடுத்த தவணைத் தொகை 2000 ரூபாய் எப்போது வரும் என்ற தகவல் கிடைத்துள்ளது. தீபாவளிக்கு முன் வரும் ஹேப்பி நியூஸ்?
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா ( பிஎம் கிசான் ) திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் லட்சக்கணக்கான விவசாயிகள் இப்போது அடுத்த தவணைத் தொகைக்காகக் காத்திருக்கின்றனர். இத்திட்டத்தின் 23ஆவது தவணை சமீபத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில், 24ஆவது தவணை எப்போது வழங்கப்படும் என்பது குறித்துப் விவசாயிகள் ஆர்வத்துடன் உள்ளனர். இத்திட்டத்தின் விதிமுறைகளின்படி, மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6,000 நிதியுதவியை மூன்று சம தவணைகளாக தலா ரூ. 2,000 வீதம் வழங்குகிறது.
அடுத்த தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் திட்டத்தின் 24ஆவது தவணையை வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வ தேதியை மத்திய வேளாண் அமைச்சகம் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், இத்திட்டத்தின் முந்தைய நடைமுறைகளை வைத்து அது எப்போது வெளியிடப்படலாம் என்று பார்க்கலாம்.
கடந்த ஆண்டுகளின் போக்கு!
கடந்த ஆண்டுகளின் பதிவுகளைப் பார்க்கும்போது, தவணைத் தொகை பெரும்பாலும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் (தீபாவளி அல்லது பண்டிகைக் காலங்களில்) வழங்கப்பட்டுள்ளது. முந்தைய தவணைகளுக்கு இடையிலான இடைவெளியைக் கருத்தில் கொண்டால், அடுத்த தவணைக்காக விவசாயிகள் 2 முதல் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
FD முதலீட்டை விட போஸ்ட் ஆபீஸ் திட்டத்தை விரும்பும் மக்கள்: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
பிஎம் கிசான் தொகை அதிகரிக்கப்படுமா?
பிஎம் கிசான் திட்டத்தின் தவணைத் தொகையை அதிகரிப்பது குறித்த ஊகங்கள் நிலவி வரும் நிலையில், அரசு இது குறித்த நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளது. பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆண்டுத் தொகையை (ரூ. 6,000) அதிகரிப்பதற்கான எந்தவொரு முன்மொழிவும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது, விவசாயிகள் முன்பைப் போலவே ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் என்ற விகிதத்தில் தொடர்ந்து நிதியுதவியைப் பெறுவார்கள்.
இளைஞர்களின் வேலை உருவாக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் – நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
பட்ஜெட் சமயத்தில் எதிர்பார்ப்பு!
பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது பிஎம் கிசான் திட்டத்தின் நிதியுதவியை அரசு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருக்கும். வேளாண்மைக்கான செலவுகள் இப்போது கணிசமாக அதிகரித்துள்ளதால் பிஎம் கிசான் நிதியுதவியை அரசு உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல, அடுத்த ஆண்டு மத்திய பட்ஜெட்டிலும் விவசாயிகளின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் அரசு இந்த விஷயத்தில் நல்ல முடிவை எடுக்குமா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கடுமையாகும் விதிமுறைகள்!
பிஎம் கிசான் திட்டத்துக்கான விதிமுறைகளையும் அரசு கடுமையாக்கியுள்ளது. ஏனெனில் இத்திட்டத்தின் கீழ் நிறையப் பேர் தகுதியே இல்லாமல் பயன்பெறுவதாக அரசு கண்டுபிடித்துள்ளது. இதனால் ஆதார் சரிபார்ப்பு, நில சரிபார்ப்பு, குடும்பத்தின் ஆண்டு வருமானம் போன்ற விஷயங்களில் விதிமுறைகளை அரசு கடுமையாக்கியுள்ளது. போலியான பயனாளிகளின் பட்டியலையும் உருவாக்கி அவர்களின் பெயரை திட்டத்தில் இருந்து அரசு நீக்கி வருகிறது.
Source link
